மாயரோகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மாயரோகம், பெயர்ச்சொல்.
  • (மாயை+ரோகம்)
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--माया + रोग = மாயாரோக3--மூலச்சொல் )
  1. இனம் விளங்காத நோய்
  2. ஒரு வசைச் சொல்

விளக்கம்[தொகு]

இது ஒரு பேச்சு வழக்கு...கைதேர்ந்த வைத்தியர்களுக்கும் இது என்ன வகையான நோய் என்று இனம் காணமுடியாத, எந்த மருந்துக்கும் கட்டுப்படாத/குணப்படுத்தப்பட முடியாத மர்மமான நோயை மாயரோகம் என்றுக் குறிப்பிடுவர்...மேலும் இந்தசொல் எதற்கும் கட்டுப்படாத, பிறருக்குப் பெரும் உபத்திரவமாக இருப்பவர்களை திட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது...

பயன்பாடு[தொகு]

  1. நம் பக்கத்து ஊரில் என்ன மாயரோகமோ வந்து ஏராளமானோர் மிகவும் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்...வைத்தியர்களுக்கும் ஒன்றும் புரியவில்லையாம்!...
  2. அந்தக் கோடிவீட்டுப் பையனுக்கு என்ன மாயரோகமோ! ஊரில் எல்லாரையும் பாடாய்ப் படுத்துகிறான்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a mysterious disease
  2. a abusive word


( மொழிகள் )

சான்றுகள் ---மாயரோகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாயரோகம்&oldid=1287814" இலிருந்து மீள்விக்கப்பட்டது