முருங்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முருங்கை (பெ)

  1. முருங்கைகாய் வளரும் ஒரு மரவகை
  2. இரும்புச் சத்து நிறைந்தது.
முருங்கை ரசம்

இவற்றையும் பார்க்க[தொகு]

  1. மரமுருங்கை, செடி முருங்கை
விளக்கம்
  • முருங்கைக் காய், ஒரு கயிற்றை முறுக்கி விட்டதுபோல பல முடிச்சுகளையுடைய நீளமான காயாக இருப்பதால் அப்பெயர் பெற்றது. முருங்கையில் இருவகை உண்டு. ஒன்று முள் முருங்கை; மற்றது உணவுக்குதவும் முருங்கை.
முருங்கை மரங்கள் பாலை நிலத்தில், வேனிற்காலத்தில் பூத்துக் குலுங்கும். முள் முருங்கை இலை அகலமானது, மற்றதன் இலை சிறியது. சங்கப் பாடல்களில் பலவற்றில் முருங்கை பற்றிக் காண்கின்றோம். அதனால் காரணப் பெயரையுடைய "முருங்கை' தமிழ்ச்சொல்லே என்பது உறுதிப்படுகிறது. சிங்களம் இதை "முருங்கா" எனக் கடன் வாங்கியுள்ளது என்பதே உண்மை. (முருங்கை - தமிழ்ச்சொல்லே! தமிழ்மணி, 04 Dec 2011)
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு

பழமொழி[தொகு]

•முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்.

•இந்த பழமொழியின் அர்த்தத்தை தவறாக புரிந்து கொண்ட மக்கள் அதை வளர்ப்பதை தவிர்த்தார்கள். நாம் நம் முன்னோர்களும், சித்தர்களும் சொன்ன ஒரு பயனுள்ள தகவலை சரியாக புரிந்து கொண்டு செயல் பட வேண்டும். ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின் ஆகியவைகள் கிடைக்கிறது. இவைகள் அனைத்தும் உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய அற்புதமான மூலிகைப் பொருட்கள். இவைகளை தினமும் யார் உணவாகப் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார் என்பதயே “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்” என்று சொல்லி வைத்தார்கள்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=முருங்கை&oldid=1986828" இலிருந்து மீள்விக்கப்பட்டது