விக்சனரி:மேற்கோள் சுட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

மேற்கோள் சுட்டுதல் என்பது அறிவுசார் படைப்புக்களில் இடம்பெறும் தகவல்களுக்குச் சான்றாக நம்பத்தகுந்த நூல், கட்டுரை, இணையத் தளம் முதலிய வெளி ஆக்கங்களைச் சுட்டுதலைக் குறிக்கும்.

ஏன் மேற்கோள் காட்ட வேண்டும்[தொகு]

படிமம்:Verifiability and Neutral point of view (Common Craft)-en.ogv
ஏன் மேற்கோள் சுட்ட வேண்டும்?

பொதுவாகக் கலைக்களஞ்சியம் போன்ற எந்த ஒரு படைப்பிற்கும் பின்வரும் காரணங்கள் பொருந்தும். அதிலும் விக்சனரி என்பது எவர் வேண்டுமானாலும் தொகுக்கலாம் என்ற அனுமதியுடன் உருவாக்கப்படும் அகராதி ஆகும். அதனால் சான்றளிக்க வேண்டிய பொறுப்பு கூடிவிடுகிறது. வெளிச்சான்றுகளுக்கு மேற்கோள் காட்டுதலின் குறிக்கோள்கள் பின்வருவன:

 • விக்சனரி நம்பகத்தன்மை மற்றும் தகவல் பயன்பாட்டை மேம்படுத்துதல்
 • ஒரு பயனுள்ள தகவலை அளித்த படைப்பிற்குத் தகுந்த மதிப்பளித்தல்; இதன்வழி தகவல்களை அனுமதியின்றி படியெடுத்துள்ளோம் என்ற குற்றச்சாட்டிற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.
 • நாம் சேர்க்கும் தகவல் நம் சொந்தக் கருத்தல்ல, மாறாக வெளிச்சான்றுகளின் பின்புலம் பெற்றது என உணர்த்துதல்.
 • இங்கு காணப்படும் தகவல் சரியா என கட்டுரையைப் படிப்பவர்களும் உடன் பணிபுரியும் பங்களிப்பாளர்களும் சரிபார்க்க உதவுதல்.
 • தொடர்புடைய பிற தகவல்களை கண்டுபிடிக்க வழிசெய்தல்.
 • எழுத்துக் குறியீடுகள், இணைப்புக்கள்வழி அணுக்கமில்லாமை போன்ற காரணங்களால் தரமான தமிழ் ஆக்கங்கள் இணையத் தேடு பொறிகளில் சிக்காமையை அவற்றை மேற்கோள்களாகப் பயன்படுத்துவதன் மூலம் குறைக்கலாம்.
 • பங்களிப்பாளர்களிடையே தகவலைச் சேர்ப்பது தொடர்பான கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதைத் தவிர்த்தல்.
 • வாழும் மாந்தர் அல்லது நிறுவனங்களைப் பற்றி எழுதுகையில் அவதூறுக் குற்றச்சாட்டு எழாமல் தடுத்தல்.

எப்போது[தொகு]

எந்த ஒரு தகவலுக்கும் மேற்கோள் வலுச் சேர்க்கும். இருப்பினும் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடிய தகவல்கள், வாழும் நபர்களைப் பற்றிய செய்திகள், இலக்கங்களில் தரப்படும் தகவல்கள், நடை பொருட்டு சுருக்கமாக எழுதி ஆனால் படிப்பவர்கள் மேலே ஆய்வு செய்யத்தக்க தகவல்கள் மற்றும் வேறொருவரின் கூற்றைக் குறிப்பிடும்பொழுது வெளிச் சான்றுகளை மேற்கோள்களாகக் காட்டுதல் இன்றியமையாதது. தவிர, கட்டுரையைப் படிக்கும் எவரேனும் [சான்று தேவை] என வார்ப்புரு மூலம் கேட்கும்போது இயன்றவரை 30 நாட்களில் தகுந்த சான்றை இணைக்க வேண்டும். அவ்வாறு சான்று தேவைப்படும் கட்டுரைகளை இங்கு காணலாம்.

சான்றுகளைப் பெற[தொகு]

நூல்கள்[தொகு]

அகரமுதலிகள்[தொகு]

 • தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வழங்கும் மின்னூல்கள்[1] மற்றும் அகரமுதலிகள் [2]
 • தெற்காசிய மொழிகளுக்கான அகரமுதலிகள்[3]
 • திராவிட மொழிக்குடும்பம்|திராவிட மொழிச் சொற்களின் சொற்பிறப்பியல் தரவு[4]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]