உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:மொழியைக் குறிப்பிடும் தலைப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மொழியைக் குறிப்பிடும் தலைப்பு

[தொகு]

கிசுவாகிலி, ஆங்கிலம், பிரான்சியம் ஆகிய மொழிகளில் உள்ள சொற்களுக்குப் பொருள் தரும்பொழுது, மொழியை மேலே குறிப்பிடுவது வழக்கம். அதற்கு நான் தேர்வு முயற்சியாக சில இடங்களில் பயன்படுத்தியுள்ளேன். உங்கள் கருத்துகள் ஏதும் இருந்தால் தெரிவிக்கவும். ஆங்கிலத்துக்கு thou, கிசுவாகிலிக்கு mti,பிரான்சியத்துக்கு légume ஆகியவற்றைப் பார்க்கவும். --செல்வா 05:13, 29 மே 2010 (UTC)[பதிலளி]

  • தேர்வு முயற்சிகளில் கொடிகள் மொழிக்கு அடுத்து வந்தால் நன்றாக இருக்கும்.
கனடா(கண்டா?) கொடி மீது சொடுக்கியை வைக்கும் போது எழுத்துப் பிழையுள்ளதென தெரிகிறது.
சில ஆங்கிலச் சொற்களின் எழுத்துக்கள் வேறுபடும் போது, அத்தகைய சொற்களுக்கு சில கொடிகள் வராது அமைந்தால் நன்றாக இருக்கும். photo(ஐக்கிய இராச்சியம் மட்டும்) - foto(ஐக்கிய அமெரிக்கா கொடி மட்டும்)
பட வார்ப்புருவில் 120px இருந்தால், {{விளக்கம்}} வார்ப்புருக்கு, அடுத்து வரும் வரிகள் ஒரு சில வரிகளில் முடியும். தற்போதுள்ள px படி படம் நன்றாக தெரிகிறது. ஆனால், வரிகளின் எண்ணிக்கை அதிகமாக வருகிறது. இது குறித்து ஆரம்பத்திலிருந்தே எனக்கு மாறுபட்ட எண்ணங்கள் உள்ளது. ஏனெனில் படத்திற்கு படம் வேறுபடுகிறது.த*உழவன் 07:25, 29 மே 2010 (UTC)[பதிலளி]
  • கொடிகள் மொழிப்பெயருக்கு அடுத்து வந்தால் நன்றாக இருக்கு என்பதை உணர்கிறேன். ஆனால் இப்படி கொடி இட்டு முதலில் காட்டுவதே மொழியின் மெயர் கொட்டையாக முன் நின்று இடையூறாக இருப்பதைத் தவிர்க்கவே. அச்சு நூல்கள் எனில் பிற எழுத்துருவில் பாங்குடன் மொழிப்பெயர் வேறு மொழிச்சொல், அதன் விளக்கங்கள் வேறு என்று காட்ட வசதிகள் இருக்கும். நான் பட்டையாக மொழிப்பெயரை இடுவதும், மொழிச்சொல்லும் அதன் விளக்கமும் கீழே தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே.கொடிகள் முதலில் வருவது சொல்லுக்கும், சொல் விளக்கத்துக்கும் இருக்க வேண்டிய முகன்மையை காத்து நிற்கின்றது (மொழிப்பெயர் ஒதுக்கமாக உள்ளது) என்று நினைக்கின்றேன்.
  • கனடா எனத் திருத்தம் செய்துவிட்டேன்.
  • ஆம் ஆங்கில எழுத்துக்கூட்டலில் இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் வேறுபடும் ஆனால் இரண்டுமே ஆங்கிலம் என்றுதான் பெயர். அப்படி வேறுபடும் இடங்களில் உள்ளே பிரித்தானிய ஆங்கிலம், அமெரிக்க ஆங்கிலம் என்று குறிப்பிடலாம். எழுத்துக்கூட்டல் வேறுபடாவிடினும், சில சொற்கள் கனடாவில் மட்டுமோ, ஆத்திரேலியாவில் மட்டுமோ கூட வழங்கும் அப்படியான சொற்களை உள்ளே தக்கவாறு குறித்தல் வேண்டும். மொழிப்பெயர் தலைப்பில் எந்த மாற்றமும் தேவை இல்லை (அது ஆங்கிலம் என்பதைக் குறிக்க மட்டுமே).
  • பட வார்ப்புரு பற்றிய உங்கள் கருத்து எனக்கு விளங்கவில்லை. எந்தப் பட வார்ப்புருவைப் பற்றிக் குறிப்பிடுகின்றீர்கள் எனத் தெரியவில்லை.
  • கடைசியாக, கொடி என்பது இங்கு முக்கியம் இல்லை. முதன்மையான சொற்களையும், அதன் விளக்கங்களையும் குழப்பாமல் தனியாக ஒதுக்கிக்காட்ட மொழிப்பெயரைச் சுட்ட ஒரு வழிமுறை. தனித்தனி சொற்களுக்குக் கொடியைக் காட்ட வேண்டாம். பொருளோ, எழுத்துக்கூட்டலோ மாறுமடும் இடங்களில் உள்ளே எழுத்தால் பிரித்தானிய ஆங்கிலம் என்பது போன்று சுட்டிக்காட்டினால் போதும்.

--செல்வா 13:48, 29 மே 2010 (UTC)[பதிலளி]

  • செல்வா, பிற மொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்தும் பணியில் பலர் ஈடுபடுவது மகிழ்ச்சியாய் இருக்கிறது. கொடிகளை இடுவதும் ஒரு புதுமையான முயற்சியே. பாராட்டுகள்! சில மொழிகள் உண்மையிலேயே நடைமுறையில் பன்னாட்டு மொழிகளாக உள்ளன (ஆங்கிலம், பிரான்சியம், இசுப்பானியம்...). இம்மொழிகள் பேசப்படுகின்ற நாடுகளின் கொடிகளை எப்படி வரிசைப்படுத்துவது? ஆங்கிலம் இந்தியாவில் இணைப்பு மொழி. இலங்கை, வங்காள நாடு, மால்டா, கென்யா போன்ற எண்ணிறந்த நாடுகளில் அது பேசப்படுகிறது. காண்க: http://en.wikipedia.org/wiki/List_of_countries_where_English_is_an_official_language இப்பின்னணியில், விக்கியின் நடுநிலைப் பார்வைக்கு ஏற்ப, எந்தவொரு நாட்டிற்கும் முன்னுரிமை அளிக்காதிருக்காதிருப்பதல்லவா நல்லது என்றொரு எண்ணம் என் உள்ளத்தில் எழுகிறது! :-) --George46 01:06, 31 மே 2010 (UTC)[பதிலளி]
  • நன்றி. ஆம் இதை நான் எண்ணிப்பார்த்தேன். முதல் 4-5 நிலப்பகுதிகளையோ,, நாடுகளையோ மட்டும் இட்டால் போதுமானது. அம்மொழிக்கான விக்கிப்பீடியா கட்டுரையைக் கண்டால் அம்மொழி வழங்கும் எல்லா நாடுகள், பகுதிகளைக் காணலாம். தமிழ் விக்சனரியில் செய்வது முதல் அல்ல. பிறமொழிகளிலும் அப்படி செய்துள்ளார்கள். எ.கா அங்கேரிய மொழி விக்சனரியைப் பாருங்கள் இங்கே.--செல்வா 01:15, 31 மே 2010 (UTC)[பதிலளி]
ஆங்கிலமொழி பேசுவோரைக் குறிக்க குறியீடு. அங்கேரிய மொழி விக்சனரியில் பயன்படுத்துகிறார்கள்
இன்னொரு முறையையும் பயன்படுத்துகிறார்கள் (அங்கேரிய விக்சனரியில்). கொடிகள் மாறும் அசைபடத்தை இணைத்துள்ளார்கள். எசுப்பானிய மொழிக்கு அவர்கள் இட்டுள்ள படத்தைப் பாருங்கள்:
எசுப்பானிய மொழி பேசும் நாடுகளின் கொடிகள் மாறிக்கொண்டே இருப்பது
  • ஆங்கில மொழி வழங்கும் முதன்மை நாடுகளில் ஐக்கிய அரசும் ஐக்கிய அமெரிக்க நாடுகளும் உள்ளன என ஏற்கலாம். ஆனால் அந்த இரு நாடுகளின் கொடிகளைக் கூறுபோட்டு, செயற்கையாகப் புதியதொரு கொடியை உருவாக்குவது வேடிக்கையாகவே இருக்கிறது. தமிழ் விக்சனரி இம்முறையைப் பின்பற்ற வேண்டுமா? கொடிகள் மாறிக்கொண்டே இருப்பதும் கணினி விளையாட்டு போலக் காட்சி தருகிறது. :)

அதில் எக்கொடி எந்நாட்டுக்குரியது என்றறிவதும் சிக்கலாக உள்ளது. எனவே, தமிழ் விக்சனரி அவ்வழி செல்லவேண்டாம் என நினைக்கிறேன். ஆனால், செல்வா மேலே கூறியது போன்று, பன்னாட்டுப் புழக்கமுடைய மொழிகளாகிய ஆங்கிலம், பிரான்சியம், எசுப்பானியம், போர்ச்சுகீசியம், தமிழ், சீனம்.... முதலியவற்றிற்கு அவை பேசப்படுகின்ற முதன்மை நாடுகளில்/பகுதிகளில் ஒருசிலவற்றையேனும் கொடி வழியாகக் காட்டலாம். பிரான்சியத்திற்கு பிரான்சு தவிர, பெல்சியம், கானடா, மற்றும் காங்கோ போன்ற பெரிய ஆப்பிரிக்க நாடு ஒன்றன் கொடியாவது காட்டல் பொருத்தம். தமிழுக்கு ஈழம், தமிழகம் (இந்தியா) தவிர சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு காட்டுவது தகும். --George46 03:45, 31 மே 2010 (UTC)[பதிலளி]

ஒவ்வொரு சொல்லும் 500 பைட்டுகளுக்கு மேல் இருப்பது மேல்விக்கியால் தரம் எனப்பிரிக்கப்படுகிறது. மற்ற மொழிகளோடு ஒப்பிடும் போது, அவர்கள் இந்த அளவையும் கருதுகிறார்கள். அண்மைய மாற்றங்கள் பகுதியில் இது நன்கு தடிமனாகத் தெரியும். அதற்கு குறைவான பைட்டுகள் சாதரணமாகத் தெரியும். எனவே, ஒவ்வொரு சொல்லும் 500பைட்டுகள் என்பது சிறப்பு.

பிறமொழி சொற்கள் பதிவில் பைட்டுகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. இதை அதிகரிக்க புதிய வார்ப்புரு அவசியமே. ஆட்சி மொழியாக இருக்கும் கொடிகளை இடுவது நல்லது என்றே கருதுகிறேன். கொடியைக் கடைசியாக இட்டால், அந்தந்தச் சொல்லுக்கு கீழே, அச்சொல்லின் மொழி பெயரும் அமையும்.
மற்றொன்று மொழிவாரி மாநிலங்களுக்கான போராட்டங்கள் நாளுக்கு நாள் வளருகிறது. எனவே, நாட்டின் கொடிகள் மட்டும் அதுவும் ஆட்சி மொழிகள் மட்டும் இருப்பின் நல்லது. அசைபடங்கள் இருப்பின் ஓரளவு நல்லதே. பைட்டுகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும். புத்தக வடிவத்தினை விட, விக்சனரி பல்லூடக வடிவம் சற்று வரவேற்க தக்கதே. பள்ளிகளில் இது இரசிக்கப் படுவதைக் கண்டிருக்கிறேன்.
மொழிபெயர்ப்பு வார்ப்புருவுக்கு உள்ள நிறமே, மொழி வார்ப்புருவுக்கும் இருப்பின் சிறப்பென கருதுகிறேன்.

வார்ப்புரு:==கன்னடம்== தற்போதுள்ள நீலநிறக் கோட்டின் பயனை dove சொல்லில் காண வேண்டுகிறேன்.

ஒரு சொல்லுக்குரிய தமிழ் மொழிபெயர்ப்பு, அனைத்தையும் விட தெரிய வேண்டும். மற்ற அழகுணர்வுகள் பொருளுணர்வினைக் குறைக்கலாகாது.

மொழிபெயர்ப்புகள் என்று இருப்பதை விட

மொழிபெயர்ப்புகள் என்று இருப்பது பொருளணர்வை அதிகரிக்கும்.

இலக்கிய எடுத்துகாட்டுகளில் () மற்ற எடுத்துக்காட்டுகளில் ஒரு சொல் வரும் போது தடிமனாக காட்டினால், பொருளணர்வை மேலும் நிலைநிறுத்தும்.

(எ. கா.) பொருளில்லாருக்கு இவ்வுலகில்லை.(த*உழவன் 15:36, 31 மே 2010 (UTC))[பதிலளி]

மொழிப்பட்டை-2

[தொகு]

பேச்சு:dove என்னும் பக்கத்தில் த*உழவன் பதிவு செய்திருத்த கருத்துக்கு மாற்றுக் கருத்தை அங்கே பதிவு செய்துள்ளேன். அதன் படி ஒன்றைக் கீழே இடுகின்றேன்.

  • (1) அசைபடமாக இருந்தால் கண்ணை உறுத்துகின்றது. பொறுமையாக படிக்கவிடாமல் கண்ணை ஈர்க்கின்றது. (2) நீலக்கோடுகளால் பிரிக்கப்பட்டிருkkum பட்டை அழகாக இருப்பதாக உணர்கிறேன்.மேலும், முதலில் கொடி இட்டு பின்னர் மொழியில் பெயரை இடுவது மொழிப்பட்டை என்பதை ஒதுக்கமாக இருக்கச்செய்வதாக உணர்கிறேன் (இப்படி இருப்பது நம் கருத்தைச் சொல்லின் பொருளுக்கு நிறைவாய் இட்டுச் செல்வதாக உணர்கிறேன்). ஆகவே கீழ்காணுமாறு ஆங்கிலம், எசுப்பானியம் கிசுவாகிலி ஆகியவற்றில் இருப்பது போல இருந்தால் நன்றாக இருப்பதாக நான் உணர்கிறேன்.




இதன் ஒரு படியை, ஆலமரத்திலும் இடுகின்றேன்.--செல்வா 12:38, 3 ஜூன் 2010 (UTC)

  • ஆலமரத்தடியில் நீங்கள் இட்ட, எசுப்பானிய அசைப்படம் கண்டேன். ஆவலில் ஆங்கில கொடிகளின் அசைப்படத்தை உருவாக்கி, அதனைபகுப்பு:ஆங்கிலம்-பழங்கள்-ல் மட்டும் பயன்படுத்தியுள்ளேன். ஆலமரத்தடியில் பலரின் கருத்தினை அறிவோம். பலரின் கருத்தினை அறிந்த பிறகே, அதனை படிவத்தில் இணைப்பேன். நன்றி.த*உழவன் 23:48, 3 ஜூன் 2010 (UTC)


சொல்லின் முதல் வரி ...


மொழிபட்டைகள் விக்கி நிறத்தோடு இருப்பதையே விரும்புகிறேன். பொருள் நிறத்தை விட, மற்றவைகள் தூக்கலாக இருக்கக் கூடாதென்றே நான் கருதுகிறேன். அதற்காக சில பட்டைகளை உருவாக்கி உள்ளேன். பலரது கருத்தினை அறிய ஆவலாக உள்ளேன்.


வார்ப்புரு:==கன்ன=

வார்ப்புரு:=கன்னட=

வார்ப்புரு:==கன்னடம்==


மொழியைக் குறிப்பிடும் தலைப்பு


ஆலமரத்தடியில் செல்வா அவர்கள் இட்ட, எசுப்பானிய அசைப்படம் கண்டேன். ஆவலில் ஆங்கில கொடிகளின் அசைப்படத்தை உருவாக்கி, அதனைபகுப்பு:ஆங்கிலம்-பழங்கள்-ல் மட்டும் பயன்படுத்தியுள்ளேன்.

ஒரு சொல்லினை பார்த்தவுடன், அது எம்மொழி என்பதனையே முதலில் உணர வேண்டும். அதனையே பல விக்சனரிகள் செய்துள்ளன. ஒரு சொல்லின் மொழிப்பெயர், கொடியை விட முக்கியம். கொடி என்பது ஒரு அழகு அவ்வளவே. ஆங்கிலம் அதிகமான நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கும் பட்சத்தில் 5-6 நாட்டு கொடிகளை இடுவதில் எனக்கும் மாறுபட்ட எண்ணங்கள் உண்டு. ஐக்கிய இராச்சியம் தானே ஆங்கில ஆட்சியை வழி வகுத்தது. அதனால் அக்கொடியை மட்டும் இடலாமா?

தமிழ் சொற்களுக்கு முன் தமிழ் என்று தலைப்பிட வேண்டாமென, முன்பு செல்வா கூறியிருந்தார். இலத்தீனிய எழுத்துக்களை பயன்படுத்தும் பல மொழிச்சொற்களுக்கு (dove), தலைப்பு அவசியமே. தமிழுக்கு தலைப்புத் தேவையில்லை என்பதே என் முடிவு.

ஆலமரத்தடியிலும், விக்சனரி குழுமத்திலும் பலரின் கருத்தினை அறிவோம். அறிய முற்படுகிறேன். பலரின் கருத்தினை அறிந்த பிறகே, அதனை படிவத்தில் இணைப்பேன். நன்றி. (த*உழவன் 00:44, 4 ஜூன் 2010 (UTC))

மறுமொழி

[தொகு]

த*உழவன், (1) என் கலையுணர்வின் நோக்கிலும், பயன்பாட்டு நோக்கிலும் thou என்பது போன்ற வடிவமே சிறந்ததாகத் தோன்றுகின்றது. (2) பை'ட் அளவைக் கூட்டுவது நம் நோக்கமே அல்ல. சொற்கள் கூட இருந்து, பை'ட் அளவு குறைவாக இருப்பதே நல்லது. ஆனால் நேர்த்தியான வடிவமைப்பு வெறும் அழகு கூட்டுவதுமட்டுமல்லாமல், ஒருவகை நமபகத்தன்மையும், வரவேற்புணர்வும் தரும். பொருளுக்கு முதன்மை தரும் விதமாக அமைவது விரும்பத்தக்கது. நிறங்களை இணக்கமான முறையில், கலையுணர்வுடன் பயன்படுத்தவேண்டும். ஒளிரும் பச்சை நிறத்தில் இருப்பது தவறாக (கலைநோக்கில்) கண்ணை ஈர்ப்பதாக உணர்கிறேன் (இது என் நினைப்புதான், ஆனால் நான் வடிவமைப்பின் அழகை விரும்புபவன்). வடிவமைப்பு, நிறவிணக்கம் (colour coordination?) என்பன நுட்பமானவை, அவை நேர்த்தியுடன் செய்தால்தான் ஈர்ப்புண்டாகும். தற்பொழுது இருக்கும் புதிய முறை சற்று நிறைவு தருவதாக உள்ளது. hebrew என்னும் பக்கத்தைப் பாருங்கள் அது என்ன எபிரேய மொழிச்சொல்லா, அல்லது ஆங்கிலத்தில் அம்மொழியை எழுதும் வழக்கமா என புரிவதற்கு சிறிது கூட நேரம் எடுக்கின்றது. carrot என்னும் சொல்லின் பக்கத்தைப் பாருங்கள் "ஆங்கிலம்", "பெயர்ச்சொல்" ஆகிய "அறிவிப்புகள்" தேவைக்கு அதிகமான அளவில் தூக்கலாகத் தெரிகின்றன. பட்டை கட்டி விடுவதால் அவை சொற்பொருளில் இருந்து விலகி (ஒதுக்கமாக) நிற்கின்றது. இவை என் தனிக்கருத்துகள்தாம். thou, ಕಾನು (கானு), tano போன்ற சொற்களின் பக்கங்கள் எளிமையாக, அழகாக இருப்பனவாக எனக்குப் படுகின்றது. --செல்வா 16:22, 31 மே 2010 (UTC)[பதிலளி]

ஆலமரத்தடி கருத்துப் பகிர்வுகள் பற்றி ஒரு கருத்து

[தொகு]
  • சொல்லுக்குப் பொருள் தரும் முறையை எவ்வாறு தரப்படுத்துவது? செல்வா சொல்லுக்கு அடுத்த வரியில் (எழிலான அமைப்பில்) கொடி, மொழிப்பெயர் தர வேண்டும் என்கிறார். த*உழவன் அவை கீழே வரலாம் என்கிறார். மேலே வந்தால் உடனே பளிச்செனத் தெரியும் என்பது என் கருத்து.
  • செல்வா hebrew, carrot, thou போன்ற இடுகைகளைக் காட்டி, குறைநிறைகளை எடுத்துரைக்கிறார். இங்கே சீரமைப்பும் தரப்படுத்தலும் தேவை என்பது தெளிவு. தமிழாயினும் பிற மொழியாயினும் எடுத்தவுடன் தமிழில் பொருள் தர வேண்டும் என்பதை அடிப்படை ஒழுங்காக அறிவிக்க வேண்டும். Hebrew என்னும் ஆங்கிலச் சொல் வடிவத்திற்கு எபிரேய மொழி என்பது ஒரு முதன்மைப் பொருள். அதைக் குறிக்க நாம் தமிழ் எழுத்துமுறைப்படி எபிரேயம் என்பது போல பிரான்சு, செருமனி, இசுபானிய நாட்டவர் வேறு சொல் வடிவங்களைப் பயன்படுத்துவர். ஆங்கிலப் பயன்பாடு தமிழ் விக்கி/விக்சனரி பயனர்களுக்கு எளிதாக இருக்கும். எனவே அதற்கு முன்னுரிமை கொடுப்பதில் தவறில்லை என நினக்கிறேன்.
  • விக்சனரியில் இடும் சொற்களுக்கு மொழிபெயர்ப்பு தருவதா சொற்பொருள் தருவதா என்றால் இரண்டுமே வேண்டும் என நாம் கூறலாம். சென்னைப் பேரகரமுதலி அம்முறையிலிலேயே உள்ளது. வேற்று மொழிகளில் பெயர்ப்பு என்றால் செல்வா சொல்வதுபோல இறுதியில் வரலாம். ஆங்கிலம் முன்னுரிமை பெறலாம்.
  • கொடி போடும்போது அது அசைவுப்படமாய் இருந்தால் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் என்றால் அப்படியே செய்யுங்கள். எனக்கு உடன்பாடே. எம்முறையாயினும் பயன்தருவதாய் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து. இந்த உரையாடலை இத்தோடு நிறுத்துகிறேன்.--George46 02:56, 1 ஜூன் 2010 (UTC)
அக்கறை மிகுந்த உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி, ஐயா.--செல்வா 03:09, 1 ஜூன் 2010 (UTC)
உங்களின் கருத்துக்கள் உள்ளம் கவர்ந்த, உண்மைகளாக இருக்கின்றன. எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப, அனைத்துச் சொற்களையும் மாற்ற முனைவேன். நன்றி.வணக்கம்.த*உழவன் 05:23, 1 ஜூன் 2010 (UTC)

மொழிப்பட்டை பற்றிய கருத்துக் கணிப்பு

[தொகு]

பயனர்களின் கருத்து வேண்டப்படுகின்றது. ஒரு சொல்லின் மொழியை அறிவிக்கும் பட்டையை உருவாக்குவது பற்றி உங்கள் கருத்துகள் வேண்டப்படுகின்றது. இக் கருத்துக் கணிப்பு 4 நாட்கள் நடைபெறும் (சூன் மாதம் 8 ஆம் நாள்வரை)). மொத்தம் மூன்று கேள்விகள் உள்ளன. உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்:

கேள்வி-1: மொழிப் பட்டையில் கொடிகள் மாறிமாறி வருமாறு அசைபடமாக இருக்கலாமா வேண்டாமா?


இருக்கலாம்:
  1. -


வேண்டாம்:
  1. --செல்வா 15:04, 4 ஜூன் 2010 (UTC)
  2. ----George46 00:38, 6 ஜூன் 2010 (UTC)
  3. ----subramachandran 17:20, 7 ஜூன் 2010
  4. இணையப் பக்கவடிவமைப்பில் இவ்வாறான மாறும் படங்கள் ஒவ்வாதவையாகக் கருதப்படுகின்றன. அதனால், அசைபடங்கள் வேண்டாமென்பதே எனது கருத்தும் பழ.கந்தசாமி 23:42, 6 ஜூன் 2010 (UTC)


கருத்துகள்:
  • கொடிக்கு முன், பின் இரண்டுமே எனக்கு உடன்பாடு :) பழ.கந்தசாமி 23:46, 6 ஜூன் 2010 (UTC)

கேள்வி-2: மொழிப்பட்டையில் கொடிகளுக்கு அடுத்து மொழி வரலாமா அல்லது மொழியின் பெயரை இட்ட பிறகு கொடிகள் வரலாமா?

மொழியின் பெயர் வந்த பிறகு கொடிகள் இடலாம்.


  1. -:#----subramachandran 17:20, 7 ஜூன் 2010
கொடிகளுக்குப் பிறகு மொழியின் பெயர் வரலாம்.


  1. --செல்வா 15:04, 4 ஜூன் 2010 (UTC)
  2. ----George46 00:38, 6 ஜூன் 2010 (UTC)



கருத்துகள்:

கேள்வி-3: மொழிப்பட்டைகளின் கீழ்க்க்காணும் முறைகளில் எது உங்களுக்கு விருப்பமானது. உங்கள் பெயரை பட்டிக்குக்கீழே இடவும்:


  1. --செல்வா 15:04, 4 ஜூன் 2010 (UTC)
  2. ----George46 00:38, 6 ஜூன் 2010 (UTC)
  3. ----subramachandran 17:20, 7 ஜூன் 2010
  4. பழ.கந்தசாமி 23:43, 6 ஜூன் 2010 (UTC)


மொழியைக் குறிப்பிடும் தலைப்பு

[தொகு]
  1. -


  1. -


கருத்துகள்:


வேறு பட்டைகள் வேண்டும்


  1. -


கருத்துகள்:

--செல்வா 15:04, 4 ஜூன் 2010 (UTC)

கருத்துக்கணிப்பு நிறைவு பெற்றது
[தொகு]

கருத்துக்கணிப்புக் காலம் முடிந்துவிட்டது. பயனர் த*உழவன் ஊரில் இல்லை போலும் (அவருடைய ஒரு குறிப்பின் படி); த*உழவனின் வாக்கு எப்பக்கம் இருந்தாலும், கருத்து தெரிவித்தவர்களின் கருத்துப்படி அசைபடம் வேண்டாம் என்றும், நீல அடிக்கோடு இட்டு கொடிகளுக்குப் பின் மொழியின் பெயர் வருமாறு அமைந்துள்ள பட்டைக்கு ஏற்பு இருக்கின்றது என்றும் தெரிகின்றது. கருத்துக்கணிப்பில் பங்குகொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி. எனவே இக்கருத்தின்படியே மொழிப்பட்டையை இனி இடலாம். சீராக ஒரே அமைப்பில் இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் இந்தக் கருத்துக்கணிப்பே. துல்லிய உள்ளடக்கத்துக்கு அடுத்தாற்போல, தேர்ந்த, தக்க படங்களுக்கு அடுத்தாற்போல நேர்த்தியான வரவேற்புணர்வு தரும் வடிவமைப்பு தேவை. இனி இதில் தேர்வு செய்தது போன்ற மொழிப்பட்டைகளைப் பயன்படுத்துவோம். ந்ன்றி. --செல்வா 00:51, 9 ஜூன் 2010 (UTC)

  • கருத்துகணிப்பு நடந்தது கண்டு மகிழ்ச்சி. இதே போல ஒட்டுமொத்த சொல் வடிவமைப்புக்கும் க.க நடந்தால் நன்றாக இருக்கும் என்பதனை உணருகிறேன். நம் தமிழ்மொழி முதல் 5 இடங்களை பிடிக்கும் போது, பிற விக்சனரிகளைவிட நன்றாக இருக்கவேண்டும் என்பதே என் அவா. அதற்குரிய முதற்படி இக்கருத்துக்கணிப்பு. விக்சனரியில் பலவித சோதனை முயற்சிகளை செய்து பார்த்தே தேவையானதை என்னால் உணர முடிகிறது.

dove போன்ற சொற்களில் ஒரு மொழிக்கு ஒரு (தொகு)வலப்பக்கம் வரும். அவ்விடங்களில் இந்த மொழி பட்டையை பயன்படுத்தும் போது, ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கவனிக்க வேண்டும். (த*உழவன் 01:47, 10 ஜூன் 2010 (UTC))

கருத்துக் கணிப்புக் கேள்விகள் உருவாக்குவதில் ஒத்துழைப்பு

[தொகு]

செல்வா, தாங்கள் குறிப்பிட்டபடி இப்பக்கத்தையும் பார்த்தேன். இப்பக்கத்தில் நடந்த உரையாடலின் தொகுப்பாகத் தாங்கள் சில கேள்விகளைக் கருத்துக் கணிப்புக்காக உருவாக்கினால் எப்படி? --பவுல்-Paul 14:13, 5 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

நானும் இதற்கு உதவுகிறேன் பவுல். கேள்விகள் முன்மொழிய முயல்கின்றேன். ஆனால் சிலவற்றைக் கருத்துக் கணிப்பு என்பதற்கு மாறாக நுட்பச் சிக்கல் என்று கூறுதல் வேண்டும். இவற்றுக்கும், வேண்டும் எனில், கட்டாயம் கருத்துக் கணிப்பு செய்யலாம். எடுத்துக்காட்டாக படம் இடுவதற்கு வார்ப்புரு தேவை இல்லை (அப்படியே இட்டாலும் ஒன்றோடு ஒன்றாக சொருகலான (nested) வார்ப்புருக்களாக இல்லாமல் இருத்தல் வேண்டும்). இதனால் பல சிக்கலகள் வருகின்றன. ஓரிடத்தில் மாற்றினால் மற்ற இடங்களிலும் மாரிப்போய்விடும், புரிந்து கொள்வதில் சிக்கல் (புதிதாக வருபவர் ஒன்றை மாற்றினால் எல்லாமும் சிதைந்து போகும். மீட்டெழுப்பலாம், விக்கிதொழில்நுட்பத்தால் என்பது வேறு செய்தி, என்றாலும் பகுதிவாரியாக மற்றம் செய்யும் வசதி இருத்தல் வேண்டும்). இரண்டு படங்கள் எல்லா பக்கங்களுக்கும் தேவை இராது. --செல்வா 15:14, 5 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
  • பலருடைய கருத்துகளை அறிந்த பிறகே தீர்மானிக்க வேண்டும் என்றில்லாத நுட்பச் சிக்கல்கள் இருப்பின், கருத்துக் கணிப்பின் எளிமை கருதி விட்டுவிடலாம். எனினும், அவ்வித நுட்பச் சிக்கல்களை இயன்ற அளவு குறிப்பிட்டு, அவை இன்னின்ன விதத்தில் கருதப்பட்டுள்ளன என்று ஓரிடத்தில் தெரிவித்தால் பயனுள்ளதாய் இருக்கும். --பவுல்-Paul 15:42, 5 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
    • நுட்பச் சிக்கல்களுக்கும், தகுந்த உரையாடல்களுக்குப் பின் தேவை இருப்பின் கட்டாயம் கருத்துக் கணிப்பு செய்யலாம். இப்படியான்வற்றைக் குறித்து நன்மை தீமைகளை முதலில் பட்டியல் இடலாம். எடுத்துக்காடாக dado என்னும் பக்கத்தைத் தொகுப்புச் சாளரத்தில் வருவித்துப் பாருங்கள். பல சிக்கல்கள் தென்படும். ஒரு பக்கத்தின் விக்கி நிரல்கள் கூடியமட்டிலும் தனிசையாக (மாடுலராக, modular-ஆக) இருத்தல் நல்லது, கூடியமட்டிலும் எளிய விக்கிநிரல்களில் இருப்பது நல்லது. விக்கியின் குறிக்கோளே அதிகம் மீசுட்டு (html)மொழி அறியாமல் பக்கங்களை (யாரும்?!!) உருவாக்குவதே. கூடிய மட்டிலும் அந்த குறிக்கோளை ஒட்டியே பக்கங்களை உருவாக்குதல் நல்லது. இவை என் தனிக்கருத்துகள் மட்டுமே. --செல்வா 15:54, 5 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]