விக்சனரி பேச்சு:ஒலிப்புதவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன் in topic கருத்து

இங்கு தமிழ் எழுத்துகளில் குறிக்கும் ஒலிப்புகள் ஏறத்தாழ உள்ள அல்லது தோராயமான ஒலிப்பு. துல்லிய ஒலிப்பு இல்லை. நுனிநா டகரம் வேறு மேலண்ணம் ஒட்டி எழுப்பும் டகரம் வேறு. இப்படிப் பல. இவை போன்ற பலவற்றையும் ஐ.பி.ஏவில் உள்ள குறியீடுகளைத் தமிழ் எழுத்துகளின் துணையுடன் பின்னர் குறிப்போம். இதனால் விளையும் நன்மை ஓரளவுக்காவது ஒலிப்புகளை தமிழ் எழுத்துகளைப் படிக்கத் தெரிந்தவர்கள் புரிந்து கொள்ளலாம். துல்லியமாக அறிய ஐ.பி.ஏ அல்லது அதற்கு ஈடாக விரிவாக உருவாக்கும் தமிழ்-வழியதான மாற்றுக்குறியீடுகள் வழி அறிதல் வேண்டும். --செல்வா 19:49, 21 ஆகஸ்ட் 2009 (UTC)

  • தமிழ் வழி உச்சரிப்புகளின் மூலம், பிற மொழியினை கற்க முனையும் புதியவர்களுக்கு இதனை விட சிறந்த வழிமுறை இருப்பதாகத் தெரியவில்லை. எந்தெந்த மொழிகளுக்கு இது பயனாகும் என்பதனை அறிய வேண்டுகிறேன். த*உழவன் 13:55, 22 ஆகஸ்ட் 2009 (UTC) {தொடர்புக்கு..}
  • இந்த புதிய குறியீடுகளைப் பயன்படுத்தி இந்தி சொற்களை பழகிப் பார்த்தேன். பலமுறை ஆங்கில எழுத்துக்களை நாட வேண்டியுள்ளது. நேரிடையாக ஆங்கிலத்தின் வழியே புரிந்து கொள்வது எளிமையாக இருக்கும். இக்குறியீடுகளைக் கற்பது இன்னொரு மொழியினை கற்பதற்கு சமம். தமிழில் சில ஒலிகள் இல்லை என்பது உண்மை. இருந்தாலும், தமிழ் அது இல்லாமலே இயங்கும்.

ஒலிகளை, ஒலிக்கோப்புகளை வைத்தே கற்பது அனைத்து முறைகளையும் சிறந்தது. விரைவில் இந்திச் சொற்களுக்கு ஒலிக்கோப்புகளைப் பதிவேற்றுகிறேன். நன்றி. த*உழவன் 05:41, 13 பெப்ரவரி 2010 (UTC)

கருத்து[தொகு]

ஆம் ஒலிக்கோப்புகளைக் கொண்டு துல்லியமாக அறியலாம். ஒலித்திரிபுக்குறிகளை (இதனைச் சுருக்கி திரிசு என்றே கூறலாம்; திரிசு = ஒலித்திரிபுக் குறி என்க :) ) விடுவிட்டுப் படித்தாலும் ஓரளவுக்கு என்ன ஒலி என்று அறியலாம். எல்லா மொழிகளுக்கும் தமிழ் எழுத்துகளைக் கொண்டே குறிக்க இயலும். ஒவ்வொரு மொழியின் எழுத்துகளையும் கற்காமல் எப்படி உரோமன் எழுத்துகளைக் கொண்டே ஐரோப்பியர் தங்கள் வசதிக்கு ஏற்ப செய்கின்றார்களோ, அது போலவே நாமும் நம் மொழி எழுத்துகளைக்கொண்டே பிறமொழி ஒலிகளைக் குறிக்கலாம். ஐரோப்பியர்கள் தாங்கள் செய்வதை அனைத்துலக முறை என்றும் வேறு அவ்வப்பொழுது அறிவித்துவிடுவர் :) தமிழ் என்பதை [t̪ɐmɨɻ] என்று எழுதினாலும் அவர்கள் முயற்சி எடுத்துக்கொண்டுதான் அது எப்படி ஒலிக்கும் என ஒருவாறு உணரமுடியும். அது போலவேதான் நாமும் நம் தமிழ் எழுத்துகளில் எழுதுவதும். இப்பொழுது பரிந்துரைக்கப்பட்டிருக்கும் முறைக்கு மாறாக பழைய முறைப்படி,
ka  க" = க1   
kha  க": = க2   
ga  க'= க3   
gha  க': = க4
என்றும் எழுதலாம். ka  க" = க1 என்பதை பின்தலைச்சுட்டு 1 என்னும் குறி தேவை. ஏனெனில் அப்பொழுதுதான் இடம் சார்ந்த சீரொழுக்கான தமிழ் வல்லின ஒலிப்பில் குழப்பம் ஏதும் வராது இருக்கும். அது மட்டுமல்லாமல் இந்தி போன்ற வடவிந்திய (வட இந்திய + வட விந்திய இரண்டும் பொருந்தும் :) ) மொழிகளில் வருவது போல த்ய, ந்ய, க்ய போன்றவற்றையும் குறிக்க இயலும். மேலும் ஓரெழுத்தின் முன்னேயோ பின்னேயோ தலைச்சுட்டாக (தலைச்சூடாக) வரும் எண்கள் 4 மட்டுமல்லாமல் பலவாகப் பெருக்கிக் கொண்டே போகலாம். எண்ணாக இல்லாமலும் பிற குறிகளும் இட்டுக்கொள்ளலாம். sh என்னும் ஒலியில் வடவிந்திய மொழிகளில் வருவது போல
श   sha  ச^
स  sa  ~ (அல்லது ச˘)   

ष   Sha  ச^:    என்பது மட்டும் அல்லாமல் வேறு தொடர்பான ஒலிகளையும் குறிக்கலாம். எ.கா: உருசியத் தலைவராக இருந்த பிரழ்சினேவ் (Brezhnev, Брежнев) என்னும் பெயரில் வரும் ж என்னும் ழகரம் கலந்த ச^கரத்தையும் வேறு பற்பலவற்றையும் குறிக்க இயலும். சுருங்கச்சொன்னால் அனைத்து வேற்றொலிகளையும், தேவை கருதி தமிழ் எழுத்துகளால் ஒலித்திரிபுக்குறிகள் (திருசுகள்) இட்டுக் குறிக்க முடியும். --செல்வா 16:26, 6 மார்ச் 2010 (UTC)--செல்வா 19:46, 6 மார்ச் 2010 (UTC)


எண்களுடனான இந்தி எழுத்துக்கள் முறையில், தாங்கள் எடுத்துக்காட்டிய மாதிரி சொற்கள் அருமை. இந்தி கற்கும் போது, முதல் க-வா, 3வது க-வா என்று எளிமையாக சிறுவர் பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன். இம்முறை, கற்போரின் மனதைக் கவரும் என்பது திண்ணம்.

//உருசியத் தலைவராக இருந்த பிரழ்சினேவ் (Brezhnev, Брежнев) என்னும் பெயரில் வரும் ж என்னும் ழகரம்// என்பதில் ழகரத்தினைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ழகரத்தினை, இப்படி பல உலக மொழிகளோடு, ஒப்பிட்டு முடிந்தவரை ஒலிக்கோப்புகளோடு ஒரு கட்டுரையை நீங்கள் தமிழ்விக்கிப்பீடியாவில் எழுத வேண்டும். சீனமொழியிலும் ழகரம் இருப்பதாகச் சொல்லுகின்றனர். சீன வானொலிக்கு, ஒருவருடத்திற்கு முன் கடிதமொன்று எழுதினேன். எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. இத்தகைய ழ-கட்டுரை காலத்தினையும் கடந்து நிற்கும்.

பலவேலைகளுக்குமிடையில் இங்கு வந்து, இந்தி கட்டமைப்பில் கலந்து கொண்டமைக்கு, எனக்குள் ஆனந்தமடைகிறேன். பழ.கந்தசாமியவர்களுக்கும் இந்தி தெரியுமென்பதால், அவருடன் இணைந்து, இந்தி அடிப்படைச் சொற்களை மேம்படுத்த முடியும். த*உழவன் 01:11, 7 மார்ச் 2010 (UTC)

நன்றி, த.உழவன். ழகரம் போன்ற ஒலிப்புகள் பிர மொழிகளிலும் உண்டு, ஆனால் தமிழ் ழகரம் அல்ல அவை. பிரான்சிய மொழியில் உள்ள jean என்னும் பெயரை ழ்சான் என்பதுபோலத்தான் ஒலிக்க வேண்டும். உருசிய மொழியில் வரும் ж இன்னும் சற்று கூடுதலான ச் ஒலி வருவது.அமெரிக்கன் (american) என்று சொல்லும்பொழுதுகூட அதில் வரும் r சிறிதளவு ழகர ஒலிப்புடையது. ஒவ்வொரு மொழியிலும் முக்கியமான 2000 சொற்களை எழுதித் தமிழில் ஒலிப்பும் பொருளும் தர முயலலாம். உருசிய மொழியில் வரும் ж தமிழ் ழகரமும் ச்3 ஒலியும் கூடினால் போன்ற ஒலி. பிரான்சிய மொழியில் வரும் Jean, jaques என்பனவும் ழ்சான், ழ்சாக் என்பது போல ஒலிக்கும்.பிரான்சிய Jean என்பதை /ʒɑ̃/ ழ்சான் என்பது போலக் காட்டலாம். இவற்றை எல்லாம் பல முறை நேரில், தக்க சூழலில் கேட்டால்தான் ஒருவாறு புரிந்துகொள்ளமுடியும். --செல்வா 04:15, 7 மார்ச் 2010 (UTC)

குறிப்புகள்[தொகு]

வார்ப்புரு:உச்சரிப்புதவி என்ற வார்ப்புருவை, இதனுள் அடக்கி மேம்படுத்தலாம். பிறகு இவ்வார்ப்புருவை நீக்கலாம்.-- உழவன்+உரை.. 00:51, 13 ஏப்ரல் 2015 (UTC)