விக்சனரி பேச்சு:தமிழ்ப்பேரகரமுதலியின் சொற்பதிவேற்றுத் திட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தகவலுழவன் முயற்சி[தொகு]

  • இம்முயற்சிகள் நேரில் உரையாடிய போதும், அலைப்பேசி உரையாடலிலும், மின்னஞ்சல் வழியாகவும், பல்வேறு பயனர்களிடம், ஒரு வருடத்திற்கும் மேலாக எடுக்கப்பட்டவை. அதனை ஓரளவு தொகுத்துள்ளேன். இதனையறிந்த பிறகு, உங்கள் எண்ணங்களைத் தெரிவித்தால். அடுத்த பதிவேற்றத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

முந்தைய உரையாடல்கள்[தொகு]

  1. இத்தரவினை பல பயனர்கள் அவ்வப்போது பதிவேற்றியே வருகின்றனர். அவற்றை இப்பகுப்பில் காணலாம். அவற்றை முழுமைப் பெற செய்யவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
  2. இதுகுறித்து பல பயனர்கள் தெரிவித்துள்ளனர். அவை வருமாறு:-
  3. பலரின் கூட்டுழைப்பால் எடுத்த முயற்சிகளைப் பற்றி, இப்பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். --தகவலுழவன் (பேச்சு) 01:54, 6 திசம்பர் 2014 (UTC)

பதிவேற்றச் சொற்கள்[தொகு]

மூலத்தரவில் இருக்கும் ஒவ்வொரு சொல்லும் மூன்று பகுதிகளை உடையது.

  1. தலைப்புச் சொல்
  2. அதற்குரிய தமிழ் விளக்கம்
  3. அதற்குரிய ஆங்கில விளக்கம்
  • இவை தனித்தனியே பிரித்தெடுக்கப்பட்டு, தனிப்பட்ட வகையில் களைகள் நீக்கப்பட்டு, விக்சனரியாக்கம் செய்யப்பட்டு, பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
  • திறநிலை மென்பொருளை அடிப்படையாகக்கொண்டு, முதன்முதலாக அதிகஅளவில், ஒரு இலட்சம் சொற்களை,2008-இல் சுந்தர் தானியங்கிப் பதிவேற்றியது. அதன் அடிப்படையில் கற்கத் தொடங்கி, அதனை சற்று விரிவுபடுத்தி, தற்போதைய பதிவேற்றத்தைத் தகவல் எந்திரன் செய்கிறது. எனினும், மூலத்தரவின் களைகள் பெருமளவு வேறுபடுவதால், 100%சரியாக தரவுப்பிழை இல்லாமல் செய்ய இயலவில்லை. எனவே, 95% தரவுப்பிழை இல்லா சொற்கள் இப்பகுப்பில் கோர்க்கப்படுகின்றன. அதனை மேம்படுத்த அப்பகுப்பின் உரையாடற்பக்கத்தில் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அதிக அளவில் ஒரு நாளில் சொற்பதிவேற்றம் நடைபெறும் போது, ஒவ்வொரு சொல்லாக சரிபார்க்கப்பட இயலாது. எனவே, இப்பகுப்பு அவசியமாகிறது.--தகவலுழவன் (பேச்சு) 11:54, 6 திசம்பர் 2014 (UTC)

கூட்டுழைப்பின் தேவை[தொகு]

  • பங்களிக்க விரும்புவோர் எண்ணிக்கை அதிகமானால், முதற்பதிவேற்றத்திலேயே இதனை செம்மையாக செய்யலாம். பலர் பங்களிப்பால், மீதமாகும் காலத்தால், தமிழ் விக்சனரியின் பிற வளங்களை அதிகரிக்கலாம். எனவே, காலம் காக்க வேண்டிய உங்களை உதவிக்கரம் நீட்டுக. இதனால் மின்சாரமும், இணையச் செலவும் கணிசமாகக் குறையும். பங்களிக்க விரும்புவோர், திட்டப்பக்கத்தில் ஒப்பம் இட்டால், அதற்குரிய குறிப்புகளையும், வழிகாட்டல்களையும், உங்களுக்குத் தருகிறேன். இப்பங்களிப்புகளுக்கு வாரம் 10-15 நிமிடங்கள் தேவைப்படும். உங்கள் அலைப்பேசி வழியாகவும் செய்யலாம். தமிழ்வளம் சேர்க்க வாரீர். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 12:01, 6 திசம்பர் 2014 (UTC)

பிற பங்களிப்பாளரின் எண்ணங்களும், தேவைகளும்[தொகு]

தமிழ் எழுத்துக்கள் எத்தனை சிறந்த பொருள் தருகிறது?[தொகு]

பிற மொழிச் சொற்களை மட்டும் அல்ல அனைத்து உபயோகத்தில் உள்ளது என்று சொன்னால் நல்லது... நாராயணன் (பேச்சு) 14:47, 27 மார்ச் 2020 (UTC)