விக்சனரி பேச்சு:புதிய பக்கத்தை உருவாக்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

fierce, fiercely என்ற இரண்டு சொற்களுக்கும் ஒரே பொருள் தந்து பொத்தாம் பொதுவாக உரிச்சொல் என்று வகைப்படுத்துவது சரியாகப்படவில்லை. adverb என்பதற்கு வினை உரிச்சொல் என்றும், adjective என்பதற்கு பெயர் உரிச்சொல் என்று வகைப்படுத்தி தனித்தனி புதுப் பக்க உருவாக்க படிவங்கள் தரலாமா? வினை உரிச்சொல், பெயர் உரிச்சொல் என்பவை சரியான சொற்கள் தானா?--ரவி 10:24, 26 ஆகஸ்ட் 2006 (UTC)

இது ஒரு சிக்கல் தான். தமிழ் இலக்கண மரபில் எதையேனும் உரித்துக் கூறும் சொல் உரிச்சொல், அவ்வளவே. இருப்பினும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது நீங்கள் குறிப்பிட்டபடி பயன்படுத்தலாம். ஆனால் கண்டிப்பாக அவற்றிலிருந்து ஒரு இலக்கண மரபு விளக்கப் பக்கத்திற்கு இணைப்பு தர வேண்டும்.
அவை இரண்டையுமே உரிச்சொல் என்ற பக்கத்திற்கு வழிமாற்றுப் பக்கமாக்கி அங்கு முழு விளக்கம் அளிக்கலாம். இப்படி பிற மொழி இலக்கண மரபுகளை வைத்து அந்தந்த மொழிச் சொற்களுக்கு விளக்கம் தருவதோடு நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும். அரவிந்த் (வடக்கன் என்ற ஆங்கில விக்கி பயனர்) இந்தப் பக்கத்தில் ஒரு மேற்கோளுடன் சுட்டியிருக்கும் தகவல்:

"Suffixes are also used to perform the functions of cases or postpositions. Traditional grammars tried to group the various suffixes into 8 cases corresponding to the cases used in Sanskrit. These were the nominative, accusative, dative, sociative, genitive, instrumental, locative, and ablative. Modern grammarians, however, argue that this classification is artificial, and that Tamil usage is best understood if each suffix or combination of suffixes is seen as marking a separate case. (Schiffman, 1999)."

-- Sundar 11:15, 26 ஆகஸ்ட் 2006 (UTC)
உண்மைதான். தமிழ் இலக்கணத்திற்கும், ஆங்கில இலக்கணத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சில சொற்களை பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல் என்று தெளிவாக வகைப்படுத்த முடியவில்லை. அப்படிப்பட்ட சொற்களை வகைப்படுத்தாமல் வெறும் மொழிபெயர்ப்பு மட்டும் தந்தால் என்ன? --Omanickam 02:03, 27 ஆகஸ்ட் 2006 (UTC)

மாணிக்கம், தெளிவாக வகைப்படுத்த இயலாத இடங்களில் வெறும் பொருள் மட்டும் தரலாம். சுந்தர், நீங்கள் சொல்வதிலிருந்து நான் புரிந்து கொள்வது இது தான்: adjective, adverb ஆகிய பக்கங்களில் மட்டும் பெயர் உரிச்சொல், வினை உரிச்சொல் என பொருள் தந்தால் போதும். வேறு சொற்களுக்கான பக்கங்களில் சொற்களை வகைப்படுத்தும்போது வெறும் உரிச்சொல் என்று மட்டும் குறித்தால் போதும். தமிழில் இல்லாத இலக்கண கோட்பாடுகளை வலிந்து மொழிப்பெயர்த்து திணிக்க வேண்டாம் என்பதே. prepostion, interjection, participle போன்ற சொல்வகைகளை விளக்குவதிலும் வகைப்படுத்துவதிலும் இந்த சிக்கல் எழுகிறது. இது குறித்து வேறு எங்கோ நாம் உரையாடியதாகவும் நினைவு--ரவி 13:08, 27 ஆகஸ்ட் 2006 (UTC)

ரவி, adjective மற்றும் adverb ஆகிய பக்கங்களில் தகுந்த விளக்கத்தோடு நீங்கள் தந்துள்ள மொழிபெயர்ப்பைத் தர வேண்டும். பின்னர் வினை உரிச்சொல், பெயர் உரிச்சொல் எனும் பக்கங்களை உரிச்சொல் என்ற பக்கத்திற்கு வழிமாற்றி அங்கு முதலில் தமிழ் மரபு விளக்கத்தை அளித்துவிட்டு பின் தமிழ் மரபுக்கும் இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்ப மொழிகளுக்கும் உள்ள வேறுபாட்டையும் குறிப்பிடலாம். இவ்வாறு செய்தபின் ஆங்கிலச் சொற்களுக்கான விக்சனரி பக்கங்களில் வினை உரிச்சொல் என்று பயன்படுத்துவதில் தவறில்லை. அந்த இணைப்பை அழுத்துபவர்கள் உரிச்சொல் என்ற பக்கத்திற்கு செல்வார்கள். என்னுடைய முந்தைய அச்சம் என்னவெனில், தமிழ் உரிச்சொற்களைத் தவறுதலாக நாம் வினை உரிச்சொல், பெயர் உரிச்சொல் எனப் பாகுபடுத்திவிடக் கூடாது. அது முறையாகாது.
ஆம், பிற ஆங்கில இலக்கண உறுப்புகள் குறித்து வேறு எங்கோ நாம் உரையாடியிருக்கிறோம். -- Sundar 05:44, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

sundar, adjectiveக்கும் adverbக்கும் தமிழில் வேறுபாடு காட்ட முடியாது என்ற பிழையான எண்ணித்தில் இக்கேள்வியை எழுப்பினேன். சொற்களின் பின்னொட்டுக்களை கொண்டே இவற்றை உணர்த்தும் தன்மை தமிழ்ச்சொற்களுக்கு உண்டு என்பதை கண்டு கொள்ள முடிந்தது. எடுத்துக்காட்டுக்கு, கடுமையாக என்பது adverb. கடுமையான என்பது adjective. எனவே உரிச்சொல் என்ற பொதுவான வகையையே பக்கங்களில் தந்தால் போதுமானதாக இருக்கிறது. வினை உரிச்சொல், பெயர் உரிச்சொல் என்ற இல்லாத சொல்வகையை உருவாக்கித் தரத் தேவையில்லை.--ரவி 10:45, 10 செப்டெம்பர் 2006 (UTC)

ஓ அப்படி எண்ணியிருந்தீர்களா? இப்பாகுபாடு தமிழ் இலக்கணத்தில் வெளிப்படையாக பிரித்துக் காட்டப்படுவதில்லை, அவ்வளவுதான். அதனால் இதைப் புகுத்துதல் சற்றே செயற்கையாக இருக்கும். ஒருவேளை சில இடங்களில் இப்பாகுபாட்டை செயற்கையாகக்கூட செய்ய முடியாதோ என்னவோ. ஏனெனில் ஆங்கிலத்திலும் "is" என்ற வினைச்சொல் வரும்பொழுது சில சிக்கல்கள் உண்டு. தமிழில் அந்த துணைவினைச்சொல் இல்லை என்பது வேறு விதயம். -- Sundar 09:40, 11 செப்டெம்பர் 2006 (UTC)

தமிழில் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்பன முதன்மையான பாகுபாடுகள். அவற்றில் உரிச்சொல்லுக்குப் பாகுபாட்டில் இடம் உள்ளது. இடைச்சொல்லுக்கு உரிய வரிசையில் இடம் இல்லை. ஒதுக்கித் தரவேண்டுகிறேன். தந்த பின்னர் தொல்காப்பியம் சொல்லதிகாரம் இடையியலில் தரப்பட்டுள்ள எல்லாச் சொற்களையும் முதலில் அதில் இணைத்துவிடுகிறேன். பின்னர் நன்னூல் முதலான இலக்கண நூல்களில் உள்ளனவற்றைச் சேர்ப்பேன். அடுத்துப் பயன்பாட்டு வழக்கிலுள்ள சொற்களை எல்லாரும் தொகுக்கலாம். முதலில் வார்புருவில் இடைச்சொல்லுக்கு இடம் ஒதுக்கித் தாருங்கள். அன்புள்ள, --Sengai Podhuvan 05:35, 27 ஏப்ரல் 2011 (UTC)Reply[பதில் அளி]

பொதுவன் ஐயா, இடைச்சொல்லுக்கு வார்ப்புருவில் இடம் ஒதுக்கியுள்ளேன் (உரிச்சொல்லுக்கு கீழே உள்ளாது). பயன்படுத்திப் பாருங்கள்--Sodabottle 06:07, 27 ஏப்ரல் 2011 (UTC)Reply[பதில் அளி]

உரிசொல் என்றால் ஏன்ன?[தொகு]

--Natkeeran 01:57, 28 ஜூலை 2010 (UTC)

வேண்டுகோள் - உருசியச் சொற்கள் வார்ப்புரு[தொகு]

அருள் கூர்ந்து உருசியச் சொற்களுக்குரிய (பெயர்ச்சொல்) புதிய பக்கத்தைத் தொகுக்கக்கூடிய வார்ப்புரு ஒன்றை யாரேனும் தெரிந்தவர்கள் செய்தால் இலகுவில் உருசியச் சொற்கள் இட உதவியாக இருக்கும்.--சி. செந்தி 19:38, 22 அக்டோபர் 2010 (UTC)Reply[பதில் அளி]

  • ஒரு பக்கத்தை உருவாக்கி, அதில் எப்பகுதிகள் வார்ப்புருக்களாக உருவாக்கவேண்டுமெனக்கூறினால் உருவாக்கித்தர என்னால் முடியும்.--த*உழவன் 23:03, 22 அக்டோபர் 2010 (UTC)Reply[பதில் அளி]
    • நன்றி, நான் குறிப்பிட்டது இங்கேயே; திட்டப்பக்கத்தில் பார்த்தீர்களானால், புதிய எசுப்பானிய, இந்தி சொற்கள் உருவாக்கும் படிவம் உள்ளது , அது போல அதனுடன் புதிய உருசியப்பெயர்ச்சொல், வினைச்சொல் இணைத்தால் நல்லது எனக்கூற வந்தேன்.--சி. செந்தி 08:28, 23 அக்டோபர் 2010 (UTC)Reply[பதில் அளி]
  • ஒரே ஒரு உருசியப் பெயர்ச்சொல்லை உருவாக்கித்தந்தீர்களென்றால், அதனை அனைத்து உருசியப்பெயர்ச்சொற்களுக்கும் உரியப் படிவமாக மாற்றி, நீங்கள் சுட்டிய படிவப்பக்கத்தில் இணைத்துவிடுவேன். --தகவலுழவன்(--TamilBOT 09:46, 23 அக்டோபர் 2010 (UTC))Reply[பதில் அளி]