வீங்கிருள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


வீங்கிருள் (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்

வீங்கு என்றால் பெருத்த, பருமையான, விரிவடைந்த என்று பொருள், ஆனால் இங்கு மிகவும் அடர்ந்த என்று பொருள். வெளிச்சம் அறவே இல்லாத மிகுந்த இருள்.

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பூங்கொடி மடவாள் உமையொரு பாகம் புரிதரு சடைமுடி யடிகள்
வீங்கிருள் நட்டம் ஆடுமெம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம்
(சம்பந்தர் தேவாரம், திருஓமமாம்புலியூர் )



வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய
வீங்கிருள் நடுநல்யா மத்தோர்
பையசெம் பாந்தள் பருமணி யுமிழ்ந்து
(ஒன்பதாம் சைவத் திருமுறை, திருவிடைமருதூர்)


(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வீங்கிருள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வீங்கிருள்&oldid=774215" இலிருந்து மீள்விக்கப்பட்டது