வீரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

வீரி:
வீரமுள்ளவள்-ஜான்சி இராணி இலட்சுமி பாய்
வீரி:
இறைவி காளி
வீரி:
அரிவாண்முனைப்பூண்டு என்னும் மூலிகை?
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வீரி, பெயர்ச்சொல்.
  1. வீரமுள்ளவள்
  2. இறைவி காளி
    (எ. கா.) (சூடாமணி நிகண்டு)
  3. இறைவி துருக்கை
    (எ. கா.) வேலார்கை வீரியைமுன் படைத்தார் போலும் (தேவா. 597, 6).
  4. ஒரு கிராமதேவதை
  5. அரிவாண்முனைப்பூண்டு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. heroic woman
  2. kali a goddess
  3. durga a goddess
  4. avillage goddess
  5. sickle-leaf...sida rhomboidea..(தாவரவியல் பெயர்)

விளக்கம்[தொகு]

  1. வீரமான, தைரியமான, சாகசமான என்று பொருட்படும் பெண்பாற்பெயராகும். இந்தச்சொல் வீரமுள்ள மாந்தப் பெண்களைமட்டுமின்றி, வீரத்தை வெளிப்படுத்திய காளி போன்ற பெண் தெய்வங்களையும், ஒரு கிராம பெண் தெய்வமான வீரியையும் குறிக்கும்...அரிவாண்முனைப்பூண்டு என்னும் மூலிகைக்கும் இந்தப் பெயருண்டு...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வீரி&oldid=1905316" இலிருந்து மீள்விக்கப்பட்டது