உள்ளடக்கத்துக்குச் செல்

durga

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

durga:
உக்கிரமான துர்க்கை
  1. சமசுகிருதம்.. दुर्गा...து3ர்கா3 மூலம்

பொருள்[தொகு]

  • durga, பெயர்ச்சொல்.
  1. இறைவி துர்க்கை
  2. இந்துப் பெண்களுக்கிடும் ஒரு பெயர் துர்கா.

விளக்கம்[தொகு]

  1. இந்துச் சமயத்தில் சிவபெருமானின் மனைவியான பார்வதியின் உக்கிர வடிவம் துர்க்கை...காளி என்னும் தேவதையாகவும் கருதப்படுகிறாள்...சிங்கம் அல்லது புலியின் மீது அமர்ந்தவளாய், ஆயுதங்கள் தாங்கிய எட்டு அல்லது பத்து கைகளைக் கொண்டவளாய், மகிசாசுரன் என்னும் அரக்கனை வதைப்பதுபோல், பொதுவாக சித்தரிக்கப்படுகிறாள்...துர்க்கை பாலை நிலத்தின் அதி தேவதையாகவும் கொண்டாடப்படுகிறாள்...இந்து மதத்தில் இந்தத் தெய்வத்தை முழுமுதற் தெய்வமாகக் கொண்டாடும் சாக்தம் என்ற ஒரு கிளைச் சமயமே உள்ளது...வங்கமொழி பேசும் இந்துக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பெண் தெய்வம்...ஆண்டுதோறும் துர்கபூஜ என்று நவராத்திரியின்போது வெகு விமரிசையாகவும், கோலாகலமாகவும் உலகின் எந்தப் பகுதியிலிருந்தாலும் கொண்டாடிக் களிப்பர் வங்க மக்கள்...
  • durga (சொற்பிறப்பியல்)
  1. ஆக்ஸ்ஃபொர்ட் அகராதி...[[[1]
( மொழிகள் )

சான்றுகோள் ---durga--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=durga&oldid=1860768" இலிருந்து மீள்விக்கப்பட்டது