file-double cut
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- file-double cut, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- தமிழில் இரு கொத்தரம் என்று பெயர்.
விளக்கம்
[தொகு]- அரத்தின் முகப்பகுதியில் ஒன்றுக்கொன்று இணையாக அமைந்த பல் வரிகள் இரு விளிம்புகளிலிருந்தும் மேல் நோக்கி வெட்டப்பட்டிருக்கும். முதல் பல் வெட்டு விளிம்பிலிருந்து விரிகோணமாக 110 பாகை மேல் நோக்கியும் இரண்டாவது பல்வெட்டு குறுங்கோணமாக 45 முதல் 51 பாகை மேல் நோக்கியும் இருக்கும்.
பயன்பாடு
[தொகு]- ஒரு கொத்தரத்தைவிட இருகொத்தரம் அராவு தளத்திலிருந்து விரைவாக மாழைத் துகள்களை வெட்டி அப்புறப்படுத்தும்.
- ஆனால், இவ்வரம் நேர்த்தியில்லாத தளத்தையே உருவாக்கும். தள நேர்த்திக்கு மீண்டும் ஒரு கொத்தரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
இலக்கியமை
[தொகு]- “நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை” என்பது மலைபடுகடாம் (பாடல் வரி 35)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---file-double cut--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html