உள்ளடக்கத்துக்குச் செல்

hernia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

hernia

  1. உறுப்புப் பிதுக்கம்
  2. குடலிறக்கம்
  3. குடல் பிக்கம்; பிக்கம்; பிதுக்கம்
  4. புட்டை, பிட்டை; அண்டவாதம்
  5. உடைவு
  6. துவாரத்தில் உறுப்பு துருத்திக் கொள்ளுதல்
  7. இரணியா, ஏணியா
விளக்கம்
  1. ஹெர்னியா என்பது பொதுவான பெயர். எந்த ஓர் உறுப்பும் அதன் இடத்தில் இருந்து இறங்குவதை, ஹெர்னியா என்று கூறுவோம். அது மூளையாகக்கூட இருக்கலாம். ஆனால், பொதுவாக ஹெர்னியா என்றாலே குடல் இறக்கம் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். நம் வயிற்றில் தொப்புள் பகுதியைப்போன்று இயற்கையாவே பல பலவீனமான பகுதிகள் உண்டு. சிலருக்கு பிறப்பிலேயே தசை மிகவும் பலவீனமாக இருக்கும். சிலருக்கு வயிற்றுப் பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் காரணமாக, தசையில் ஓட்டை ஏற்பட்டு குடல் இறக்கம் ஏற்படலாம். அப்படி இறங்கும் குடல், தானாகவே மீண்டும் உள்ளே சென்றுவிட வாய்ப்பு உள்ளது. அப்படிச் செல்ல முடியாத நிலையில், அந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைபட்டு, குறிப்பிட்ட குடல் பகுதி கெட்டுப்போகும். அப்படிப்பட்டவர்களுக்கு உடனடியாக அந்தப் பகுதியில் கெட்டுப்போன குடலை அகற்றிவிட்டு, நல்ல பகுதியுடன் இணைக்க வேண்டும். (குடல் இறக்கத்துக்குப் புதிய சிகிச்சை, ஜூனியர் விகடன், 24-ஆகஸ்ட்-2011)




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=hernia&oldid=1865847" இலிருந்து மீள்விக்கப்பட்டது