taxonomy
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
taxonomy
- பகுப்பியல்; பாகுபாட்டியல்
- வகைப்பிரித்தல்; தாவரங்கள், விலங்குகள், மற்ற உயிரினங்கள் ஆகியவற்றின் வகைப்பாடு, பிரிவுகள் பற்றி விவரிக்கும் இயல்
விளக்கம்[தொகு]
- வேறு பெயர் முறைப்பாட்டியல். வகைப்படுத்தலின் நெறிமுறைகளையும் நடைமுறைகளையும் ஆராயுந்துறை. இதன் தந்தை ஸ்வீடன் நாட்டு இயற்கை ஆராய்ச்சியாளர் லின்னேயஸ் 1707 - 1778) ஆவார். இது தாவர வகைப்பாட்டியல், விலங்கு வகைப்பாட்டியல் என இரு வகைப்படும். பொதுவாக, ஓர் உயிரியின் உறுப்பமைவு, வேலை, வளர்ச்சி முதலியவற்றிலுள்ள ஒற்றுமை வேற்றுமை அடிப்படையில், அது வகைப்படுத்தப்படுகிறது. அவ்வாறு வகைப்படுத்துவதில்
- உலகம் (கிங்கடம்)
- பெரும்பிரிவு (பைலம்)
- வகுப்பு (கிளாசு)
- வரிசை (ஆர்டர் அல்லது பிரிவு டிவிசன்)
- குடும்பம் (பேமிலி)
- பேரினம் (யீனசு)
- சிறப்பினம் (சுபீசிசு) எனப் பல அலகுகள் உண்டு. இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது சிறப்பினமே. எல்லா முக்கிய உருவியல் பண்புகளிலும் ஒன்றை மற்றொன்று ஒத்தமையும் தனி உயிரிகளைக் கொண்டதே சிறப்பினம். ஓர் உயிரியை இனங் கண்டறிய, அதன் சிறப்பினப் பெயரே மிக இன்றியமையாதது. இன்று இத்துறை பல நிலைகளிலும் நன்கு வளர்ந்துள்ளது
மேற்கோள்[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் taxonomy