ஐந்தாம்படை
Appearance
பொருள்
ஐந்தாம்படை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- கமுக்கமாகச் (இரகசியமாக) செயற்பட்டு வஞ்சகம் செய்வதை ஐந்தாம்படை வேலை செய்துவிட்டான் என்று சொல்லி வருகிறோம். எப்படி வந்தது இது? மன்னர்களின் படை நான்கு. அவை: தேர்ப்படை, யானைப்படை, குதிரைப் படை, காலாட்படை. (இந்நாளில் வான்படை, கடற்படை, தரைப்படை என மூன்றே) மேற்சொன்ன நான்கு படைகளும் நேரடியாக எதிர்ப்பட்டுத் தாக்கும். இப்படி நேர்முகமாகத் தாக்காமல் மறைமுகமாக வேலை செய்பவர்கள் (அரசியலில்) ஐந்தாம் படை என இழிவாகக் கருதப்படுகிறார்கள். (பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம் - 78: ஐந்தாம் படை யார்?, 12 பிப் 2012 )
- மற்றொரு விளக்கம்:பண்டைய நாட்களில் மன்னர்கள் தங்கள் தேர், யானை, குதிரை மற்றும் காலாட்படைகளுடன், அடையாளம் தெரியாமலிருக்கப் பெரும்பாலும் எதிரி நாட்டு நபர்களைக்கொண்டே உளவுக் குழுக்களை வைத்திருப்பர்...இவர்கள் எதிரி நாட்டின் படைகள், அரசரது அரண்மனை மற்றும் முக்கியப்பட்டோரின் இல்லங்களில் ஊடுருவி, உளவு பார்த்து, தம்மை அத்தொழிலுக்கு நியமித்தவர்களுக்கு முக்கிய இரகசியத் தகவல்களை பல வழிகளில் கொடுப்பர்... இவர்களே 'ஐந்தாம் படை'...
- மேற்கண்டவாறு தாய்நாட்டுக்கு எதிராக அயல்நாட்டுக்கு உதவும் இவர்கள் தங்களில் ஒருவராக வாழ்ந்துக்கொண்டே எதிரி நாட்டிற்கு ஐந்தாம் படையாகச் செயல்படுவதால் அவர்களின் நாட்டாரால் தேசத் துரோகி எனவும் அழைக்கப்பட்டனர். அதைப்போலவே தற்காலத்திலும் நம்மில் சிலர் மாற்றாருக்கு ஆதரவாகவும் நமக்கு எதிராகவும் செயல்பட்டால் அவர்களை ஐந்தாம்படை எனவும் துரோகி எனவும் அழைக்கிறோம்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஐந்தாம்படை--- DDSA பதிப்பு + வின்சுலோ +