காந்து
Appearance
பொருள்
காந்து(வி)
- எரிவெடு. கைப் புண் காந்துகின்றது
- வெப்பங்கொள்
- கருகு சோறு காந்திப் போயிற்று
- மனங்கொதி. புத்திபோய்க் காந்து கின்றது (கம்பரா. சடாயுகா. 37)
- பிரகாசி பரம்பிற்காந்து மினமணி (கம்பரா. நாட்டுப். 7)
- பொறாமை கொள். அவளைக்கண்டு காந்துகிறாள்.
- வீணாய் எரி
- கோபி காந்தி மலைக்குத்து மால்யானை (வள்ளுவமா. 11)
- சுட வை; சுடு
- காய்ந்த மண், சூடான பாத்திரம் முதலியன போல நீர், மழை முதலியவற்றைச் சுவறச்செய்
- தேங்காய் முதலியவற்றைப் பல்லினாற் கறுவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- burn, smart, as a sore
- feel burning sensation in the body
- be scorched, charred, reduced to cinder
- be hot with indignation
- shine, give out lustre, emit rays
- burn with envy
- burn without use, as oven
- be angry with
- heat
- absorb, exhaust by evaporation, as water, rain
- bite off, scrape out with the teeth, as a coconut
பயன்பாடு
- ராஜா மட்டும் எண்ணெய் தேய்த்துக் கொள்ள முடியாது என்று சொல்லித் தூரத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்காவிட்டால் தோஷம் என்று சொன்னாள். ராஜாவுக்கோ என்ன சொன்னாலும் காதில் ஏறவில்லை. "அரப்புக் காந்தும்; நான் மாட்டேன்." என்று பிடிவாதமாகச் சொன்னான் ராஜா. ( ராஜா வந்திருக்கிறார், கு. அழகிரிசாமி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +