அமைதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அமைதல், பெயர்ச்சொல்.
- அடங்குதல்(கல்லா. முரு. வரி, )
- திருப்தியாதல்
- அமைய வுண்மின்..
- உடன்படுதல்
- கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை (திருக்குறள் )
- வழுவாயினும் ஏற்புடையதாதல்
- பொருள் வேறுபட்டு வழீஇ யமையுமாறு (தொல்காப்பியம் பொ. உரை)
- தீர்மானமாதல்
- அந்த வீடு எனக் கமைந்தது
- நெருங்குதல்
- வழையமை சாரல் (மலைபடுகடாம் )
- பொருந்துதல்
- பாங்கமை பதலை (கந்தபுராணம் திருப்பர..)
- போதியதாதல்
- கற்பனவு மினியமையும் (திருவாசகம் )
- தங்குதல்(அகநானூறு )
- ஆயத்தமாதல்
- அமைதிர் போருக்கு (கந்தபுராணம் வச்சிர. )
- தகுதியாதல்
- நிறைதல்
- உறுப்பமைந்து (திருக்குறள் )
- முடிவடைதல்
- அமைந்த தினிநின் றெழில் (கலித்தொகை )
- இல்லையாதல்(சீவக சிந்தாமணி )
- செய்யக் கூடியதாதல்
- காரியம்..அமையுமாயினும் (சேது புராணம் அவை..)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to become still, quiet, to subside
- to be satisfied, contented
- to submit, acquiesce, agree
- to be regularized, as irregular expressions
- to be settled, fixed up
- to crowd together, be close
- to be attached, connected, joined
- to suffice, in the 3rd pers. only
- to abide, remain
- to prepare
- to be suitable, appropriate
- to be complete
- to come to an end, to be finished
- to be non-existent
- to be practicable
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +