உள்ளடக்கத்துக்குச் செல்

papillon

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
papillon ( ஒலிப்பு:பாப்பியோன் ) - பட்டாம்பூச்சி

papillon - ஒலிப்பு: பாப்பியோன் , /pa.pi.jɔ̃/

பொருள்

papillon (ஆண்பால்) (பெயர்ச்சொல்)

  1. பட்டாம்பூச்சி
  2. மிகு திறமையாளர், பல திறம் கொண்டவர், அடிக்கடி புதிய கோணங்களில் (திறமை நோக்கில்) வளர்ந்துகொண்டிருப்பவர்.
  3. பட்டாம்பூச்சி போன்ற வடிவுடையதாகக் கருதப்படுவது, முடிச்சு, மரை
    1. இறக்கை இருப்பது போல உள்ள மரை (கையில் பிடித்து முறுக்கித் திருகுவதற்கு ஏற்றதாய் இருப்பது)
  4. நீச்சலில் ஒரே நேரத்தில் இரண்டு கைகளையும் தூக்கி நீரைத் தள்ளி உந்தும் நீச்சல் வகை.
  5. மடித்து வைத்து இருக்கும் துண்டறிக்கை (இறக்கை போல பிரித்துப் படிப்பது)
படத்தின் இடப்புறம் கீழே காது இரண்டு உள்ள மரைகள், பிரான்சிய மொழியில் பாப்பியோன் (papillon) என்னும் சொல்லால் குறிக்கப்பெறுவன
விளக்கம்
  • -
பயன்பாடு
  • Gracieux entre tous, le papillon a toujours su émerveiller les hommes[1]. (ஒயிலழகு மிக்கவை யாவற்றினும் சிறந்ததான பட்டாம்பூச்சி (papillon) மாந்தர்களை எப்பொழுதும் வியப்பில் ஆழ்த்துகின்றது.)
தொடர்பான சொற்கள்


  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2010-04-20 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-09-08.

papillon

papillon (ஒலிப்பு:பாப்பியோன் ) என்னும் ஒரு வகை நாய் - பப்பியோன் நாய்

papillon - ஒலிப்பு: பாப்பியோன் )

பொருள்

papillon (பெயர்ச்சொல்)

விளக்கம்
  • இலத்தீன் சொல்லாகிய papilio ("பட்டாம்பூச்சி, அல்லது அந்துப்பூச்சி") என்பதில் இருந்து பிரான்சிய மொழிச் சொல்லாகிய papillon (“பட்டாம்பூச்சி”) என்பது உருவாகி, அதிலிருந்து இந்த ஆங்கிலச்சொல் பிறந்தது.
  • இத்தாலிய ஓவியர் திசியானோ விச்செல்லி (Tiziano Vicelli) முதலானோர் படங்களில் இருந்து பப்பியோன் நாய் போன்ற சிறு நாய்கள் 1500களில் இருந்தே இருந்து வந்துள்ளது தெரிகின்றது
பயன்பாடு
  • -
  • -
"https://ta.wiktionary.org/w/index.php?title=papillon&oldid=1994715" இலிருந்து மீள்விக்கப்பட்டது