உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தேன்குழல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

தமிழ்நாட்டின முருக்கு நொறுக்குத்தீனி போல உள்ளது? தேன்குழல் ஒரே ஒரு வட்டம் போலல்லவா இருக்கும். படவிவரம் பார்த்தேன். தெலுங்கு பெயரை ஆங்கில ஒலிவடிவத்தில் கூறியுள்ளனர்.-- உழவன்+உரை.. 15:47, 26 சனவரி 2015 (UTC) Reply

  • இட்லி, தோசை, வடை போன்றே தேன்குழலும் தெலுங்கு நாட்டில் உண்ணப்படும் நொறுக்குத்தீனியாகும்...பெயர்தான் ஜந்துகிலு'...பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் யாவும் ஒன்றே...தேன்குழலின் தமிழ் நாட்டுப்படம் கிடைக்காமையால்தான் தெலுங்கு நாட்டுத் தேன்குழலின் படத்தை இணைத்தேன்...தேன்குழல் ஒரே ஒரு வட்டமாக இருக்குவேண்டுமென்று அவசியமில்லை...தோற்றமும் படத்தில் காட்டியபடி சிறியதாகவோ அல்லது இன்னும் பெரியதாகவோ இருக்கும்...இணையத்தில் இப்பண்டத்தின் வடிவமைப்பைப் பாருங்கள் [[1]]...தெலுங்கு பெயர்...ஆங்கில ஒலிவடிவு என்கிறீர்கள்...எப்படி?..புரியவில்லை!...ஜந்துகிலு என்றால் ஒன்றின்மீது ஒன்றாக, வளைவு, சுளிவாக என்னும் பொருளைப் போன்றது...தோற்றமும், பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும், செய்முறையும் ஒன்றே என்பதால் தெலுங்கு ஜந்துகிலுவும் தமிழ்த் தேன்குழலும் ஒன்றே என்பது என் எண்ணம்...இந்த இரு உணவுப்பண்டங்களின் மேல் படங்களில் பொரியுண்ட எள்ளைக் கருப்பு நிறத்தில் காணுங்கள்...சரியில்லை எனில் இந்தப்பக்கத்தையே நீக்கிவிடுங்கள்...எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை...--Jambolik (பேச்சு) 21:38, 26 சனவரி 2015 (UTC)Reply
வெளியிணைப்பில் வழியே வந்த தேன்குழலைக் கண்டேன். தமிழக முருக்கு போன்றுள்ளது என்ற செய்தியையேக் குறிப்பிட்டேன். நீக்கும் எண்ணத்தில் இல்லை. உங்கள் விளக்கத்தினால், இது ஒரு கலாச்சார ஒற்றுமையை உணர்த்துகிறது என்ற புரிந்துணர்வு ஏற்பட்டு மகிழ்கிறேன். -- உழவன்+உரை.. 00:35, 27 சனவரி 2015 (UTC)Reply
உண்மையில் தேன்குழலும் முறுக்கும் இரு மாறுபட்ட பட்சணங்கள்...இப்போது முருக்கு எனப்படுபவை முறுக்கு என்பதின் திரிபு...ஊறவைத்த அரிசியை இடித்துச் சலித்து, வேறு பொருட்களைச் சேர்த்துப் பிசைந்து , ஒர் உருண்டை மாவை உள்ளங்கையில் எடுத்துக்கொண்டு கட்டைவிரல் ஆட்காட்டிவிரல்களுக்கிடையே மாவைக் கொஞ்ச, கொஞ்சமாகக் கொண்டுவந்து ஒரு துணியின் மேல் மணி மணியாக, முறுக்கி, முறுக்கிச் சிறு வட்டங்களாகச் சுற்றிப் பிழிவதே முறுக்கு எனப்பட்டது...பின்னாட்களில் அச்சில் வைத்து பிழிந்த இத்தகைய பட்சணங்கள் எல்லாமே முறுக்கு எனப்பட்டு பிறகு முருக்கு ஆனது...அப்போதும் கையால் பிழியப்பட்டு தயாரித்த பண்டம் கைமுறு(ரு)க்கு என்று புதியப் பெயரைப் பெற்றது...நீங்கள் அனுப்பிய முருக்குப் படத்தொகுப்பில் கீழ் வரிசையின் நடுப்படத்தில் மேற்புறம் காணும் ஆறு முருக்குகளே அசல் முறுக்குகளாகும்...சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நல்ல சுவையுள்ள தேன்குழல் கிடைக்கும்...அந்தப்பக்கம் சென்றால் வாங்கி படமெடுத்து, சுவைத்துவிட்டு, படத்தை விக்சனரியில் இணைத்துவிடுங்கள்...ஒரு தமிழ்த் தேன் குழலின் படம் கிடைத்துவிடும்!!!--Jambolik (பேச்சு) 01:24, 27 சனவரி 2015 (UTC)Reply
எனக்கும், சென்னைக்கும் 250 கி. மீ. தொலைவு. இருப்பினும் செல்லும் போது, சுவைக்க முற்படுகிறேன். மீண்டும் பிரிதொரு உரையாடலில் சந்திப்போம். வணக்கம்.-- உழவன்+உரை.. 01:51, 27 சனவரி 2015 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:தேன்குழல்&oldid=1276780" இலிருந்து மீள்விக்கப்பட்டது