உள்ளடக்கத்துக்குச் செல்

மேவுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மேவுதல், பெயர்ச்சொல்.
  1. அடைதல்
    (எ. கா.) மேகநாதன் புகுந்திலங்கை மேயநாள் (கம்பரா. திருவவ.10)
  2. விரும்புதல்
    (எ. கா.) அவருந்தா மேவன செய்தொழுகலான் (குறள். 1073)
  3. நேசித்தல்
    (எ. கா.) மேவியன் றாநிரை காத்தவன் (திவ். திருவாய். 3, 2, 9)
  4. ஓதுதல்
    (எ. கா.) மேவரு முதுமொழி விழுத்தவ (பரிபா. 8, 9)
  5. உண்ணுதல் (W.)
  6. நிரவிச் சமமாக்குதல்
    (எ. கா.) வயலை மேவினான்
  7. மேலிட்டுக்கொள்ளுதல்
    (எ. கா.) மேவற்க மென்மை பகைவரகத்து (குறள். 877)
  8. வேய்தல்
    (எ. கா.) தோலைமேவி (ஈடு., 5, 1, 5)--(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  9. அமர்தல் (திவா.) திருத்துருத்தி மேயான் (திருவாச. 31, 3)
  10. பொருந்துதல்
    (எ. கா.) ஒருமை வினைமேவு முள்ளத்தினை (பரிபா. 13, 49)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To join; to reach To desire To love To learn, study To eat To level, make even, as the ground To manifest, assume of. மேய்3-. To thatch, cover over To abide, dwell To be attached; to be united; to be fitted or joined



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேவுதல்&oldid=1271398" இலிருந்து மீள்விக்கப்பட்டது