சிறுவர், சிறுமியரிடையே பழக்கத்திலுள்ள ஒரு சொல்...ஒருவரிடம் ஒரே ஒரு கடலை உருண்டை, மிட்டாய் போன்ற, கைகளினால் பிய்க்கமுடியாதத் தின்பண்டங்களிருந்தால், அதை இருவருக்குப் பகிர்ந்துக்கொள்ளப் பற்களால் கடித்துத் துண்டாக்குவதை காக்காய்க்கடி என்பர்...சில சமயங் களில் எச்சில் படாமலிருக்கத் தின்பண்டத்தைக் கைக்குட்டை அல்லது போட்டிருக்கும் சட்டையின் ஒரு பகுதித் துணியால் மூடி/சுற்றிக் கடித்துத் துண்டுகளாக்கி மகிழ்ச்சியாக உண்பர்...