உள்ளடக்கத்துக்குச் செல்

கடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கடி:
கடி என்றால் கலியாணம்
கடி:
கடி என்றால் காவல்
கடி:
என்றால் பூசை
கடி:
என்றால் பேய்--ஒரு கற்பனைப் படம்
கடி:
என்றால் ஊறுகாய்--பூண்டு ஊறுகாய்
கடி:
என்றால் மேகப்படை-படம்--நோய் கண்ட மனிதனின் முதுகுப்புறம்
கடி:
என்றால் குறுந்தடி---இவ்வகையதே.
கடி:
என்றால் இரப்போர் கலம்--சிரிய நாட்டுப் பிச்சைக்காரர்களின் பிச்சைக் கலயத்தின் உலோக மாதிரி.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

உரிச்சொல்

[தொகு]
பொருள்
பொருள் ஆங்கிலம் வழக்கு
அச்சம் frightful கடுங்கண் யானை
ஐயம் doubt கடுத்தனள் அல்லளோ அன்னை
கரிப்பு biter கடி மிளகு
காப்பு protective கடிகா
கூர்மை sharp வாள்வாய் கடிது
சிறப்பு elegance கடும் புனல்
புதுமை innovate கடித்தளிர்
மிகுதி abundance கடும் புனல்
முன்தேற்று (சத்தியம் செய்தல்) pledge கடுஞ்சூள் தருகுவன்
வரைவு retreat ஊரைக் கடிந்தார் (நீங்கினார்)
விரைவு speed கடிது வந்தார்
விளக்கம் bright கடும் பகல்

பெயர்ச்சொல்

[தொகு]


கடித்த ஆப்பிள்
பொருள்

கடி...(பெ)

 1. வாசனை
  (எ. கா.) கடிசுனைக் கவினிய காந்தள் (கலித். 45).
 2. கலியாணம்
  (எ. கா.) கன்னிக்காவலுங் கடியிற்காவ லும் (மணி.18, 98).
 3. காவல்
  (எ. கா.) கடியுடை வியனகரவ்வே (புறநா. 95, 3).
 4. புதுமை
  (எ. கா.) கடிமலர்ப் பிண்டி (சீவக. 2739).
 5. விளக்கம்
  (எ. கா.) அருங்கடிப் பெருங்காலை (புறநா. 166, 24).
 6. மிகுதி
  (எ. கா.) கடிமுர சியம்பக் கொட்டி (சீவக. 440).
 7. விரைவு
  (எ. கா.) எம்மம்பு கடிவிடுதும் (புறநா. 9, 5).
 8. பூசை
  (எ. கா.) வேலன் கடிமரம் (பரிபா. 17, 3).
 9. சிறப்பு
  (எ. கா.) அருங்கடி மாமலை தழீஇ (மதுரைக். 301).
 10. கூர்மை (திவா.)
 11. இன்பம் (பிங். )
 12. ஓசை
  (எ. கா.) கடி முரசு (நன். 457, உரை).
 13. அச்சம்
  (எ. கா.) அருங்கடி வேலன் (மதுரைக். 611).
 14. அதிசயம் (சூடாமணி நிகண்டு)
 15. தேற்றம் (நேமி. சொல். 58.)
 16. சந்தேகம் (தொல்.சொல். 384, உரை.)
 17. கரிப்பு
  (எ. கா.) கடிமிளகு தின்ற கல்லா மந்தி (தொல். சொல். 384, உரை).
 18. காலம் (பிங். )
 19. பேய்
  (எ. கா.) கடிவழங் காரி டை (மணி. 9, 49).
 20. சிறுகொடி (W.)
 21. பல்லாற்கடிக்கை
  (எ. கா.) நாய்க்கடிக்கு மருந்து
 22. கடித்த வடு
 23. விஷக்கடி
 24. ஊறுகாய்
  (எ. கா.) மாங்காய் நறுங்கடி (கலித். 109).
 25. அரைக்கடி
 26. மேகப்படை
  (எ. கா.) இடுப்பிற் கடி வந்திருக்கிறது
 27. நீக்கம் (பிங். )
 28. குறுந்தடி (கடிப்பு)
  (எ. கா.) கடிப்புடையதிரும் . . . முரசம் (பதிற்றுப். 84, 1).
 29. பிரயாணத்தில் எருது குதிரைகளை மாற்றும் இடம். (பேச்சு வழக்கு) ---புறமொழிச்சொல்--உருது--gaḍi
 30. இடுப்பு
  (எ. கா.) கடிக் கீழ்த் தொடிற் கைகழுவுக (சைவச. பொது. 220).
 31. இரப்போர்கலம்
  (எ. கா.) கைவளை பலியொ டுங் கடியுட் சேர்ந்தவால்.(W.)
  (எ. கா.) பிச்சை யேற்ற பெய் வளை கடிஞையின் (மணி. பதி. 63)
 32. காவல்
 33. காப்பு
 34. விரைவு

வினைச்சொல்

[தொகு]
 1. பற்களால் பிரித்தெடுத்தல்/கவ்வி எடுத்தல்,

இலக்கணம்

[தொகு]
"கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆ ஈரைந்தும் பெய்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே" - தொல்காப்பியம் 2-8-86
"ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே" - தொல்காப்பியம் 2-8-67

பயன்பாடு

[தொகு]
 • எம் அம்பு கடிவிடுதும் : (எம் அம்பினை விரைவாக விடுவோம்)
 • கடி நுனைப் பகழி : (கூர்மையான நுனியை உடைய அம்பு)

மொழிபெயர்ப்பு

[தொகு]
 • ஆங்கிலம் (பெயர்ச்சொல்}
 1. scent, odour, fragrance
 2. wedding
 3. protection, safeguard, defence
 4. newness, modernness
 5. brightness, transparency
 6. abundance, copiousness, plentifulness
 7. speed, swiftness
 8. worship, homage
 9. beauty,excellence
 10. sharpness, keenness
 11. delight, gratification, pleasure
 12. sounding, sonorousness
 13. fear
 14. wonder, astonishment
 15. certainty, assurance
 16. doubt
 17. pungency
 18. time
 19. devil
 20. small creeper
 21. biting
 22. mark or scar of a bite
 23. poisoning as the result of bites or stings
 24. pickle
 25. gall, brasion, being the result of great tightness or rubbing of apparel
 26. ringworm
 27. removal, rejection
 28. drumstick
 29. stage in a journey, where the horses or bulls of carriages are changed
 30. waist
 31. beggar's bowl

(வி)

 1. bite
 2. ()
 3. hard
 • {{இந்தி }}
 1. थामना (வி)
 2. मुश्किल ()

சொல்வளம்

[தொகு]
கடி, கடித்தல், கடிப்பு
கடிகை, கடிகாரம், கடிவாளம், கடிநாய்
கடிபடு
காக்காக்கடி
கொசுக்கடி, நாய்க்கடி, பூச்சிக்கடி, காணாக்கடி


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 1. விரைவு
"https://ta.wiktionary.org/w/index.php?title=கடி&oldid=1972152" இலிருந்து மீள்விக்கப்பட்டது