உள்ளடக்கத்துக்குச் செல்

கருவிள நீர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கருவிள நீர்:
இளநீர்க் காய்களின் பொதுத் தோற்றம்
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • கருவிள நீர், பெயர்ச்சொல்.
  1. ஒருவகை இளநீர்
  2. இளம் தேங்காயினுள் கிடைக்கும் நீர்மப் பொருள்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a kind of tender coconut
  2. a kind of coconut water

விளக்கம்

[தொகு]
  • சாதாரணமாக எங்கும் கிடைக்கும் இளம் தேங்காயினுள்ளிலிருந்து கிடைக்கும் இளநீரானது உடற்நலத்திற்கு மிகச்சிறந்தது...இருப்பினும் இந்த இளநீர்க்காய்களில் பலவிதமான இனங்களுண்டு...அவை உருவம், நிறம், அளவு, குணம் ஆகியவற்றில் ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன...அவ்வகையில் கருவிள நீர் எனப்படும் இளநீரானது, பொதுவான இளநீருக்குரிய நற்பலன்களை நல்குவதோடு, சிறப்பாக கபாதிக்கம், புழு நெளிகின்ற விரணம், கரப்பான் ஆகிய நோய்களைப் போக்கும்...வனப்பும். மகிழ்ச்சியும் இந்த இளநீரைப் பருகுவதால் கிட்டும்...இந்த இளநீர்க் காய் கருமை நிறத்ததாக இருக்கும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கருவிள_நீர்&oldid=1469848" இலிருந்து மீள்விக்கப்பட்டது