கழஞ்சு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கழஞ்சு(பெ)
- கழஞ்சு என்ற சொல்,ஒரு செடியின் விதையினைக் குறிக்கும்,
- பழந்தமிழர் அதிக அளவு தங்கத்தைக் கூட அளக்கும் அலகாகப் பயன்படுத்தினர்.
- கழஞ்சு திரிந்து கிழிஞ்சு என்று கூறப்படுவதும் உண்டு.
- (எ.கா) - ஒரு கிழிஞ்சி நெல்லு தாரேன் பொண்ணு தாரியா சம்மந்தி -என்ற நாட்டுப்புறப்பாடல்.
- ஒரு கழஞ்சு 5.4 கிராம்
- இரண்டு குன்றிமணி என்பது ஒரு மஞ்சாடி. 10 மஞ்சாடி கொண்டது ஒரு கழஞ்சு ஆகும். கழஞ்சு என்பது தற்போதைய எடையில் 5.4 கிராம் ஆக கணக்கிடப்பட்டது.
- பத்து மஞ்சாடி அல்ல.இருபது மஞ்சாடி ஒரு களஞ்சு என்பதே சரி.
- களஞ்சு என்பது செடியின் விதை அல்ல. மஞ்சாடி என்பதே ஒரு மரத்தின் விதை.
மேற்கோள்கள்
[தொகு]- சிலப்பதிகார அடிகளில் கழஞ்சு உள்ளது.
- "தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி
- விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு
- ஒருமுறை யாகப் பெற்றனள்: அதுவே==ஒப்பீடு==
- நூறுபத்து அடுக்கி எட்டுக்கடை நிறுத்த
- வீறுஉயர் பசும்பொன் பெறுவதுஇம் மாலை"
- (மாதவியின் அரங்கேற்ற நாட்டியத்திற்குக் கிடைத்த அரசப்பரிசுமாலை
- 1008 கழஞ்சு எடையளவிருந்தது =1784.16 grams)
ஒப்பீடு
[தொகு]- கழகத்தமிழகராதிப் பன்னிரு பணவெடை கொண்ட நிறை, எடுத்தலளவை என்று கூறுகிறது.
- கோனார் அகராதியும் 'பன்னிரு பணவெடை' என்று கூறுகிறது.
- கிரியா அகராதி, தங்கத்தை அளக்கும் ஓர் அளவு என்று கூறுகிறது.மேலும் 1.77 கிராம் = 1 கழஞ்சு என்றும் கூறுகிறது.
தொடர்புடைய பிற சொற்கள்
[தொகு]காரட்,குண்டுமணி,பவுன்,carrot ,millesimal fineness,916
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a kind of seed which was used to weigh gold in ancient tamil culture.
- One Kazhanju is 5.4 gram
- பொன்னை அளக்கும் அளவு கோல்