காணொளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அருவியொன்றின் நிகழ்படம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காணொளி(பெ)

  • நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்.
  • ஒரு நொடியில் நிகழும் ஒரு காட்சியை நொடிக்கு, 24 முறை அல்லது அதற்கும் அதிகமான தடவையாக ஒளிப்படமாக எடுத்து, பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக, அப்படங்களை ஒரே திரையில், ஒருங்கே விழுமாறு செய்தால், நிகழ்வுகள் திரையில் நடப்பது போன்றே தோற்றம் அளிக்கும்.
  • இத்தகைய அசையும் படிமங்களின் வரிசை, நிகழ்படம் என்றழைக்கப்படுகிறது. திரைப்படம் என்பதும் இதே அடிப்படையான கருத்திலேயே இயங்குகின்றது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - video

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=காணொளி&oldid=1968758" இலிருந்து மீள்விக்கப்பட்டது