அரியாசனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

அரியாசனம்
அரியாசனம்

பொருள்[தொகு]

அரியாசனம், பெயர்ச்சொல்.

  1. மன்னர் அமரும் இருக்கை
  2. சிம்மாசனம், அரியணை

விளக்கம்[தொகு]

  • அரி + ஆசனம். அரி என்றால் சிங்கம். மன்னன் அமரும் இருக்கையின்(ஆசனம்) இருபுறமும் கைகள் வைத்துக்கொள்ளும் நீண்ட இடங்களின் முனைகள் சிங்க உருவம் கொண்டதாய் இருக்கும். அரியாசனத்தின் தலைப்பகுதியும் சிங்க உரு கொண்டிருக்கும். அரசனும் காட்டை ஆளும் சிங்கம்போல நாட்டை ஆளும் சிங்கமாகக் கருதப்பட்டான். அகவே அரசன் அமரும் ஆசனம் அரியாசனம் அல்லது சிம்மாசனம் ஆயிற்று..இப்படியெல்லாம் இல்லாமல் ஏதாவது ஒரு வகையில் சிங்க உருவம் கொண்ட அரியாசனங்களுமுண்டு.

மொழிபெயர்ப்பு[தொகு]

  1. throne ஆங்கிலம்

பயன்பாடு[தொகு]

  • ...
(இலக்கியப் பயன்பாடு)
யார் தருவார் இந்த அரியாசனம்?
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் - (கண்ணதாசன், மஹாகவி காளிதாஸ் திரைப்படப் பாடல்)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

சான்றுகள் ---அரியாசனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரியாசனம்&oldid=1899400" இருந்து மீள்விக்கப்பட்டது