அரி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- இச்சொல்லுக்கு, பல பொருள்கள் உண்டு. கீழே அட்டவனையில் காணவும்.
- அரிசி
- குதிரை
- கூர்மை
- சிங்கம்
- விட்டுணு
- பகைவன்
- திருமால்
- அரிதல்
- கண்வரி
- கடல்
- பொன்
- கிண்கிணிப்பரல்
விளக்கம்
[தொகு]- அரி என்பது வேர்ச்சொல்லும், பல்பொருள் ஒரு மொழியும் ஆகும்.
- எனவே, இது இயல்பாக பல சொற்களின் பிறப்புக்குக் காரணமாக அமைகிறது.
- அங்ஙனம் தரும் பொருட்களை இருவகைப் படுத்தலாம்.
- 1) தனிச்சொல், 2)கூட்டுச்சொல்
- அவை, கீழே விளக்கப் பட்டுள்ளன.
மொழிபெயர்ப்பு
[தொகு]- softness, exiguity (ஆங்கிலம்)
உரிச்சொல்
[தொகு]- பொருள்
- ஐம்மை, மென்மை
- இலக்கணம்
- அரியே ஐம்மை - (தொல்காப்பியம்) 2-8-59
- இலக்கியம்
- அரிமயிர்த் திரள் முன்கை வாலிழை மடமங்கையர்(புறநானூறு 11)
பல்பொருள்
[தொகு]1அரிப்பு, | 2அரித்தல் | 3அரிதல் | 4உட்டுளைப் பொருள் | 5தகட்டு வடிவு | 6கூர்மை | 7குறைவு | 8மென்மை |
9 பனை | 10கண் | 11இடை விடுகை | 12காற்று | 13பன்றி | 14 வண்டு | 15பச்சை | 16சிங்கம் |
17பனங்கருக்கு | 18கண்வரி | 19குற்றம் | 20சக்கரம் | 21திருமால் | 22இரேகை | 23குரங்கு | 24கிள்ளை |
25கதிரருக்கும் பருவம் | 26சூரியன் | 27நெருக்கம் | 28மரவயிரம் | 29வலி, வலிமை | 30விசி | 31தேவேந்திரன் | 32அரிது |
33நெற்கதிர் | 34சந்திரன் | 35அழகு | 36உவமை | 37ஈர்வாள் | 38சோலை | 39தேர் | 40நிறம் |
41 அரிக்கட்டு | 42ஒளி | 43பாம்பு | 44செம்மறியாடு | 45அரிச்சுவடி | 46பரற்கல் | 47பறை | 48மூங்கில் |
49அரிசி | 50மலை | 51அரிவாள் | 52பகைவன் | 53 சிவன் | 54குதிரை | 55படுக்கை | 56மழைத்தூவல் |
57விதை | 58 மாலை | 59நமன் | 60சிலம்பினுட்பரல் | 61அரிதாரம் | 62கட்டில் | 63தவளை | 64அலையரித் திட்டு |
65தீ | 66பொன் | 67கடல் | 68அரிமா | 69வெற்றி | 70தெரு சந்தி | 71ஆயுதம் | 72கள் |
பயன்பாடு
அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு' --(பழமொழி)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- கிரியா அகரமுதலி + கழக கையகராதி