ஆசனம்
Appearance
ஆசனம் (பெ)
- அட்டாங்க யோகத்தில் மூன்றாம் படி
- யோகம் பயில்வோர் அமர்ந்திருக்கும் நிலை
- பீடம் முதலிய தவிசு; இருக்கை
- சுவத்திகாசனம், கோமுகாசனம், பதுமாசனம், வீராசனம், கேசரியா சனம், பத்திராசனம், முத்தாசனம், மயூராசனம், சுகாசனம்; இருக்கைநிலை
- மலவாய்
- உரியகாலம் வரும்வரை பகை மேற்செல்லாதிருக்கை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Third Step in Ashtanga Yoga
- Posture followed by Yogic disciples
- seat, anything to sit on, raised seat, throne, mat of sacrificial grass, skin of deer or tiger
- yogic posture, of which nine are considered to be important
- anus, rectum
- halting, encamping, biding one's time, awaiting a suitable opportunity to attack
விளக்கம்
பயன்பாடு
- சிம்மாசனம் - அரியணை - throne
- இத்தனை நேரம் திடமாக நின்று பேசிக்கொண்டிருந்த நந்தினி இப்போது திடீரென்று சோர்வடைந்து அங்கே கிடந்த ஆசனம் ஒன்றில் அமர்ந்தாள். (பொன்னியின் செல்வன், கல்கி)
- கூடத்தில் போட்டிருந்த ஆசனம் ஒன்றில் யாரும் சொல்லாமல் தாமே மாமல்லர் உட்கார்ந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார். (சிவகாமியின் சபதம், கல்கி)
- கோதை ஓடிப் போய் மகாராணி அமர்வதற்கேற்ற ஆசனம் ஒன்றைத் தேடி எடுத்துக் கொண்டு வந்து போட்டாள். மகாராணி அமர்ந்து கொண்டார். (பாண்டிமாதேவி, கல்கி)
- அவர் உன்னத ஆசனத்தில் அமர்ந்திருந்தார். நானோ, கைதியின் கூண்டில் நின்று கொண்டிருந்தேன். ( நம்பர் 888, கல்கி)
- ஆசனம் என்றால் இருக்கை என்றுதான் பொருள். பழம்பெரும் பாடகி திருவிதாங்கூர் அரசவையில் பாடப்போனபோது அவர் அமரப்போகும் நேரத்தில் சம்ஸ்கிருத அறிஞரான மகாராஜா ”டே, ஆசனத்தை தட்டிப் போடமாட்டியா?” என்று தூசி தட்டச் சொல்ல கேட்டிருந்த பிள்ளைவாள் அப்படியே செய்து தலைக்கு தீம்புவந்ததாக ஒரு வம்புக்கதை உண்டு. (அகச்சொற்கள் புறச்சொற்கள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- ஆசன முபத்தங் கைகால் (மச்சபு. பிரம. 11).
- ஆசன முந்திய காலமங் குணர்ந் திருத்தல் (இரகு. திக்கு. 21)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆசனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:இருக்கை - சிம்மாசனம் - நாற்காலி - # - #