சாதாரணமாக எங்கும் கிடைக்கும் இளம் தேங்காயினுள்ளிலிருந்து கிடைக்கும் இளநீரானது உடற்நலத்திற்கு மிகச்சிறந்தது...இருப்பினும் இந்த இளநீர்க்காய்களில் பலவிதமான இனங்களுண்டு...அவை உருவம், நிறம், அளவு, குணம் ஆகியவற்றில் ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன...அவ்வகையில் ஆயிரங்கச்சி இளநீர் எனப்படும் இளநீரானது, பொதுவான இளநீருக்குரிய நற்பலன்களை நல்குவதோடு, சிறப்பாக வெப்பத்தையும், பசியையும் உண்டாக்குவதோடு, வாதகபத் தொந்தம், சீழ்விரணம், குன்மம் ஆகியப் பிணிகளையும் நீக்கும்...