உள்ளடக்கத்துக்குச் செல்

இஞ்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இஞ்சி:
இஞ்சி:
நறுக்கப்பட்ட இஞ்சி
பொருள்
  1. மருப்பு
  2. மதில் சுவர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. ginger- Zingiber officinale
  2. rampart

பிரான்சியம்

  1. gingembre
  2. rampart

இந்தி

  1. अदरक

இஞ்சியின் குணங்கள்[தொகு]

இஞ்சிக்கு காசம், கபம், வெள்ளோக்காளம்,சந்நிபாதசுரம்,பேதி, வாதசூலை, வாதககோபம் ஆகியப் பிணிகள் போகும்.. மிகுந்த பசிதீபனம் உண்டாகும்...

உபயோகிக்கும் முறை[தொகு]

  1. இஞ்சிச் சாற்றை வாள சம்பந்தப்பட்ட பேதிமாத்திரையுடன் அனுபானமாககச் சேர்த்துக் கொடுப்பர்...இது மருந்தின் குணத்தை அதிகப்படுத்துவதோடு குடல் இரைப்பை முதலிய உறுப்புகளிலுள்ள மாசை வெளியாக்கும்...
  2. ஒரு தோலா எடையுள்ள இஞ்சியை அரைத்துப் பிழிந்தெடுத்த சாற்றுடன் ஒரு கோழிமுட்டையின் மஞ்சள் கருவைக்கூட்டிநன்றாக அடித்து, கரண்டியிலிட்டு சிறிது நெய் விட்டு, நீர் சுண்டி வெந்த பதத்தில் உட்கொள்ளலாம்...இப்படி சில தினங்கள் சாப்பிட தாது வலுக்கும்...தீனிப்பை, ஈரல் ஆகியவைகளுக்குப் பலத்தை கொடுக்கும்...நினைவாற்றலை அதிகப்படுத்தும்...ஒரு இஞ்சித் துண்டை வாயிலிட்டு அடக்கி வைத்துக்கொண்டிருந்தால் தாகம் அடங்கும்...
  3. வேறு பலப் பிணிகளுக்கு இஞ்சியுடன் மற்றும் சில மருந்துப் பொருட்களைக்கூட்டி இஞ்சி லேகியம், [1],- இஞ்சித் தைலம்[2], ஆகியவைகளைச் செய்து உபயோகித்துப் பயன் பெறுவர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=இஞ்சி&oldid=1884922" இலிருந்து மீள்விக்கப்பட்டது