இறைவனடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • இறைவனடி, பெயர்ச்சொல்.
  • (இறைவன்+அடி)
  1. கடவுளின் திருப்பாதங்கள்
  2. இறைவனின் இருப்பிடம்

விளக்கம்[தொகு]

  • இறைவனின் உருவ வழிபாடு மிகுந்துள்ள இந்துச்சமயத்தில், இறைவனின் முகதரிசனத்தைவிட அவனுடைய பாததரிசனமே சாலச்சிறந்தது என்பர்...பாதம் என்னும் சமசுகிருதச் சொல்லிற்கு தமிழில் அடி என்பர்...ஆகவே இறைவனடி என்றால் கடவுளின் காலடி (பாதம்) என்றுப்பொருள்...மிகவும் மகிமை பொருந்திய இறைவனடியில் வீழ்ந்து சரணாகதி செய்துவிட்டால், எத்தகைய பாவங்களும் நீங்கி இறைவனின் அருள் கிட்டி மோட்சம் என்னும் மீண்டும் பிறவா நிலையை அடைந்து இறைவனுடனேயே ஆன்மாவாக இருந்துவிடலாம் என்பது இந்துக்களின் சம்பிரதாயமான நம்பிக்கை...இத்தகைய திருவடிகளோடுக்கூடிய இறைவனின் இருப்பிடமே இறைவனடி எனவும் போற்றப்பட்டது..(எ.கா., தேர் நிலை பெற்றிருக்கும் இடம் தேரடி என்பதைப்போல).இதுவே மோட்சமும் ஆகும்...


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. god's feet
  2. god's abode( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இறைவனடி&oldid=1281384" இலிருந்து மீள்விக்கப்பட்டது