உம்மைத்தொகை
Appearance
பொருள்
உம்மைத்தொகை(பெ)
- உம் என்பது தொக்க தொகை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- An elliptical compound in which the conj. part. உம் is understood
விளக்கம்
- தொகை எனில் தொகுத்து வருதல் (மறைந்து வருதல்).
- இராப்பகல் - இரவும் பகலும் என்ற பொருளில் வரும் உம் தொக்கி நிற்கும் சொல்
- தாய்தந்தை, அண்ணன் தம்பி, வெற்றிலை பாக்கு, தட்பவெட்பம், மேளதாளம்
- கபில பரணர் வந்தார். இது கபிலரும் பரணரும் வந்தார்கள் என்று விரியும். உம் எனும் இடைச் சொல் மறைந்திருப்பது உம்மைத் தொகை. "உம்' வெளிப்பட்டு நின்றால் அது விரி. (மொழிப் பயிற்சி-25: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 06 பிப் 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உம்மைத்தொகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:உம்மை - தொகை - வேற்றுமைத்தொகை - வினைத்தொகை - பண்புத்தொகை - உவமைத்தொகை