உவமைத்தொகை
Appearance
பொருள்
உவமைத்தொகை(பெ)
- உவமையுருபு தொக்க தொகை. எடுத்துக்காட்டு: மதிமுகம் (மதி போன்ற முகம்), மலர்ப்பாதம்
- உவமையாகுபெயர்; உவமையான பொருளின்பெயர் உவமேயத்திற்கு ஆகிவருவது. எடுத்துக்காட்டு: மயில்வந்தாள், குயில் பாடினாள்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- (Gram.) elliptical compound in which the sign of comparison is understood,as in
- A figure of speech in which the thing compared stands for the subject of comparison
விளக்கம்
- தொகை எனில் தொகுத்து வருதல் (மறைந்து வருதல்).
- புலிப் பாய்ச்சல் புலியைப் போன்ற பாய்ச்சல் என்று பொருள் தரும். போன்ற எனும் உவமை உரு, மறைந்திருப்பதால் இஃது உவமைத் தொகை. தாமரை முகம் எனில் தாமரை போன்ற முகம் போன்ற எனும் உவமை உருபு மறைந்திருப்பதால் உவமைத் தொகை. (மொழிப் பயிற்சி-25: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 06 பிப் 2011)
- தாமரை முகம் எனில் தாமரை போன்ற முகம் எனும் உவமை உருபு மறைந்திருப்பதால் உவமைத் தொகை.
- உவமைத் தொகையில் உவம உருபுகள் மறைந்து வரும். போல, போன்ற, ஒத்த, நிகர்த்த, புரைய, ஒப்ப, அனைய- ஏதாகினும் ஓர் உருபு மறைந்து வரலாம். (மொழிப் பயிற்சி-26: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 13 பிப் 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உவமைத்தொகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:உவமை - தொகை - வேற்றுமைத்தொகை - வினைத்தொகை - பண்புத்தொகை - உம்மைத்தொகை