உலங்கூர்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பெல் 206 உலங்கூர்தி

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • உலங்கூர்தி, பெயர்ச்சொல்.
  1. சுழல் இறக்கைகளோடு வானில் பறக்கும் ஒரு வகை வானூர்தி

ஒத்தசொல்[தொகு]

  1. உலங்கு வானூர்தி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. copter; helicopter; chopper

விளக்கம்[தொகு]

  • உலங்கு வானூர்தி என்னும் சொல்லின் குறுக்கமே உலங்கூர்தி என்பதாகும். அதாவது
  உலங்கு + வான் + ஊர்தி --> உலங்கு வானூர்தி

இதில் உள்ள வான் என்னும் சொல் மறைக்கப்பட்டு உலங்கூர்தி என்று சுருக்கி 2010 இற்குப் பின் தமிழ்நாட்டில் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

பயன்பாடு[தொகு]

  • நான் வான்படையின் உலங்கூர்தியில் பறந்து சென்றேன்

சொல்வளம்[தொகு]

வானூர்தி - பறனை - வான்கலன்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உலங்கூர்தி&oldid=1989563" இலிருந்து மீள்விக்கப்பட்டது