ஊருணி
Appearance
ஊருணி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- public drinking water tank in a village or town
விளக்கம்
- ஊருணி = ஊர் + உண் + இ = ஊரார் அனைவரும் உண்பதற்குரிய நீர் நிலை
- ஊராரால் உண்ணப்படும் நீரை உடையது.
- மக்கள் பருகும் நீர் நிலை.
- சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'குளம் ' என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'ஊருணி ' எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை 'ஏரி ' என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை 'ஏந்தல் ' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய் ' என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர்.