விக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/நவம்பர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
« 2011/அக்டோபர்

(Recycled அக்டோபர்)

நவம்பர்

(Recycled நவம்பர்)

2010/டிசம்பர் »

(Recycled டிசம்பர்)

நாள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் }}

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் | audio=En-uk-{{subst:PAGENAME}}.ogg }}

When the words for a given month have all been replaced (or whatever) then subst: the sub-templates in on this page. That will preserve this month's archive, leaving the entries in the "Recycled" monthly pages to be (optionally) reused next year.

தினம் ஒரு சொல்   - நவம்பர் 1
கஃசு (பெ)

பொருள்

  1. காற்பலம் என்னும் எடை அளவு
  2. கைசு[1]
    தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
    வேண்டாது சாலப் படும்.-(திருக்குறள்- 1037)

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. a measure of weight equivalent to a quarter palam

சொல்வளம்

காசு - கசு - கசுகுசெனல் - எட்கசி
  1. கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை-1, (1974)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 2
ஊருணி (பெ)


பொருள்

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்

பயன்பாடு

  • ஊருணி நீர்நிறைந் தற்றே (குறள், 215)


ஆதாரம் (அகரமுதலி) (ஆக்சுபோர்டு)

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 3
சகி (பெ)


பொருள்

  1. சேடி, பாங்கி, தோழி.
    சலிப்புத் தருகுதடி சகிப் பெண்களே! (கண்ணன் என் காதலன்,- பாரதியார்)
  2. பொறுத்துக் கொள்.(சூடாமணி நிகண்டு)
    அவள் கோபத்தில் அடித்ததால், நான் சகித்துக் கொண்டு, அவளை உற்றுப் பார்த்தேன்.அடித்த அவளோ அழுதாள்.

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. female companion
  2. tolerate
  • இந்தி
  1. साझी
  2. सहना

சொல்வளம்

சகிதம் - சக - சாக - பகுப்பு:நிகண்டுகளின் சொற்கள்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 4
கவட்டை (பெ)
கவட்டைக் கிளை

பொருள்

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்

பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 5
குளப்படி (பெ)

பொருள்

  1. குளம்பு படிந்த சுவடு
  2. குளம்புச்சுவட்டில் தேங்கிய நீர்

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. hoof-marks
  2. puddles in hoof-marks

பயன்பாடு

  1. குளப்படிநீருமளப்பருந் தன்மைப் பிரளய சலதியும் (பதினொ. திருவிடைம. 7).
  2. அவர்கள் வியசனம் குளப்படியென்னும்படி (அஷ்டாதச. தத்வத். ஈசு. 11).
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 6
கலாபம் (பெ)

பொருள்

  1. பெண்கள் அணியும் இடையணி
  2. ஆண் மயிலின் தோகை

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. woman's ornament adorning the girdle
  2. peacock's feathers

பயன்பாடு

  • வா கலாப மயிலே! ஓடி நீ வா கலாப மயிலே! (திரைப்பாடல், 'காத்தவராயன்')
  • பார்வைகளால் பல கதைகள் பேசிடலாம் கலாபக் காதலா! (திரைப்பாடல், 'காக்க காக்க', 2003)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 7
ஞெமை (பெ)

பொருள்

  1. மரவகை
    (எ. கா.) திருந் தரை ஞெமைய பெரும்புனற் குன்றத்து (அகநானூறு. 395).

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. a tree

சொல்வளம்

ஞெரி - ஞெள் - ஞெரல் - ஞெரேலெனல் - ஞெலி - ஞெலுவல்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 8
தசை (பெ)
காலின் தசை

பொருள்

  1. குறிப்பிட்ட வேலையைச் செய்யும், ஒழுங்கான உள் உடல் சதை ஆகும். இது பலவகைப் படும்.

மொழிபெயர்ப்புகள்

  • ஆங்கிலம்
  1. muscle
  • எசுப்பானியம்
  1. músculo

சொல்வளம்

கலம் - இயக்கம் - மண்டலம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 9
நடுகை (பெ)
நடுகை

பொருள்

  1. ஒரு ஏக்கரில் ஆறில் ஒரு பங்கு உள்ள நிலப் பரப்பளவு.
  2. நாற்று நடவு

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. a measurement of land
  2. Transplanting of seedlings


சொல்வளம்

நடு - கை - நடவு
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 10
பகடு (பெ)

பொருள்

  1. எருது/கடா, அது பூட்டிய ஏர்
    பகட்டினானு மாவினானும் (தொல்காப்பியம். பொ. 76).
  2. அதட்டுதல்
    பகடு தெழிதெள்விளி (அகநானூறு. 17)


மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. ploughing ox
  2. utter threats

சொல்வளம்

பகு - பகடை - பகடக்காரன்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 11
பக்கல் (பெ)

பொருள்

  1. பக்கம்
    என்பக்க லுண்டாகில் (பெரியபுராணம். இயற் பகை. 7)
  2. இனம்
  3. பிறை நாள்

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. side
  2. one's class or tribe

சொல்வளம்

பிறை - அமாவாசை - பௌர்ணமி
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 12
யூகி (பெ),(வி)

பொருள்

  1. (பெ) நுண்ணறிவுடையவர்; நிபுணன், மந்திரி

(வி)

  1. இப்படி இருக்கலாம் அப்படி நடக்கலாம் என எண்ணு; உத்தேசி; கணி
  2. அனுமானி
    அவள் வயது என்ன என்று உன்னால் ஊகிக்க முடியுமா?
  3. ஆராய்
    யார் வெற்றி பெறுவார் என்பதை யூகிக்கவே முடியவில்லை.

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. (பெ) intelligent, discerning person; person with political wisdom.

(வி)

  1. guess, conjecture,
  2. infer, conclude ((பேச்சு வழக்கு) )
  3. examine, scrutinise

சொல்வளம்

ஊகம் - அனுமானம் - சிந்தனை - கணி
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 13
வங்குநோய் (பெ)
கைச்சொறி
எலியின் சொறி
சொறிக்கான உயிரி

பொருள்

  1. தோல் நோய்களில் ஒன்று.

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. scabies
  1. खुजली

சொல்வளம்  : அளவன் - சொறி

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 14
வடவனம் (பெ)
ஆலம் பழம்

பொருள்

  1. ஆலமரம் / அதன் பூ
    வெள்ளத்திடைவாழ் வடவனலை (கம்பராமாயணம். தைலமா. 86).

மொழிபெயர்ப்பு

  • தாவரவியல் பெயர்
  1. Ficus bengalensis

சொல்வளம்

பகுப்பு:குறிஞ்சிப்பாட்டு பூக்கள் (இப்பகுப்பில் பலவற்றினைக் காணலாம்.)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 15
வன்கண் (பெ)


பொருள்

  1. கொடுமை, மனக்கொடுமை
  2. வீரத்தன்மை
  3. பகைமை
  4. பொறாமை
  5. கொடும் பார்வை
    வன்கண் ஆடவர் அம்புவிட (புறநானூறு, 3)

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. cruelty, hardness of heart, pitilessness
  2. bravery, fortitude, cool determination
  3. enmity
  4. envy
  5. evil eye

சொல்வளம்

வன்மை - கண் - கொடுமை
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 16
சமநுகம் (பெ)

பொருள்

  1. இருமடிய உயிரினம் ஒன்றின், ஒத்த நிறப்புரிகளில் உள்ள, ஒரு மரபணுவின் இரு எதிருருக்களும் ஒத்த பிரதிகளாக இருப்பின், அது சமநுகமாகும்

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. homozygous

சொல்வளம்

சமம் - நுகம் - மரபியல்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 17
ஓலைவாளை (பெ)
Trichiurus

பொருள்

  1. வாளைமீன் வகை
    ஓலைவாளைக்கருவா டுண்டக்கால் (பதார்த்த. 926).

மொழிபெயர்ப்பு

  • விலங்கியல் பெயர்
  1. Trichiurus (பேரினம்)
  • ஆங்கிலம்
  1. cutlas-fish

சொல்வளம்

மீன் - மின் - வாள் - ஓலை
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 18
நன்னன் (பெ)

பொருள்

  1. நற்குணங்கள் உடையவர்

பயன்பாடு

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. good-hearted man

சொல்வளம்

நன்னாள் - நன்னாரி - நன்னிலம் - நன்னீர் - நன்னுதல் - நன்னெறி - நன்னி - நன்னை
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 19
சடப்பால் (பெ)
சடப்பால்=முதற்பால், கடைப்பால்

பொருள்

  1. தாயின் முலைப்பால்

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. mother's milk, foremilk , hindmilk

சொல்வளம்

பால் - பல் - தாய்ப்பால் - தன்னியம் - முலைப்பால் -தனசாரம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 20
ஞெரி (பெ)
புளிய ஞெரி

பொருள்

  1. பழ ஓடு
    புளிய ஞெரி - (தொல்காப்பியம், புணரியல் 28 - உரையாசிரியர் இளம்பூரணர் மேற்கோள்.)
  2. பானை ஓடு
  3. முறிந்த துண்டு.
    முண்ஞெரி (நன்னூல். 227, விருத்.).

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. hollow Peri-carp or hollow skin of a ripped fruit
  2. broken part of a pot
  3. Cut or broken piece

சொல்வளம்

ஞெமை - ஞெரல் - ஞெரேலெனல்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 22
மண்டு (பெ),(வி)

பொருள்

  1. (பெ) மூடன். குறிப்பாக மூடக் குழந்தை. வீட்டுப்பேச்சு வழக்கு. பெரும்பாலும் செல்லமாக "டே மண்டு, இங்க வா".

(வி)

  1. நெருக்கமாக இரு
  2. எண்ணிக்கையில் வேகமாக அதிகரி/கூட்டு
  3. உக்கிரமாக வளர்
  4. விரைந்து செல்
  5. திரள், சேர்
  6. ஈடுபடு
  7. செலுத்து
  8. தாக்கு
  9. ஆவலாய்ப் பருகு; நிரம்ப உண். "அந்த மாட்டுக்கு எம்புட்டுத் தாகம், அம்புட்டுத் தண்ணியையும் மண்டிருச்சு"
  10. திருடு
  11. தாங்கு

மொழிபெயர்ப்புஆங்கிலம்

  1. (பெ) fool

(வி)

  1. be close, crowded, pressed
  2. be excessive, vehement, fierce
  3. grow fiercely
  4. move swiftly
  5. collect together; abound; come in flocks, throng; press, rush
  6. be fascinated, charmed, engrossed
  7. thrust in
  8. press upon; attack
  9. eat and drink greedily
  10. snatch a thing; steal
  11. support

சொல்வளம்  : மண்டி - மண்டா - மண்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 21
கதுப்பு (பெ)
கூந்தல்
கரும்புத்தோகை
பழக்கதுப்பு

பொருள்

  1. கூந்தல், மயிர்
  2. தோகை
  3. தடித்த சதை
  4. பழம், காய் ஆகியவற்றின் மையப் பகுதி
    நெய்கனிந்து இருளிய கதுப்பு; கதுப்பு என மணிவயின் கலாபம் (சிறுபாணாற்றுப்படை)
    ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன் (புறநானூறு)

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. lock, hair, tress
  2. feathers of peacock
  3. lobe
  4. fleshy part of fruits and vegetables

சொல்வளம்

கது - உப்பு - காது
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 23
கது (பெ)
கை வடு
மலைப்பிளப்பு

பொருள்

  1. வடு
    (எ. கா.) கதுவா யெஃகின் (பதிற்றுப்பத்து. 45, 4)
  2. மலைப்பிளப்பு
    (எ. கா.) கதுப்புகுந் துறங்குபு கழுதுஞ் சோர்ந்தவே (சூளா. கல்யா. 234).

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. cicatrice, scar
  2. mountain clef

சொல்வளம்

பிளவு - காது - கதுப்பு - உப்பு
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 24
கழி (பெ), (வி), ()
மூங்கில் கழி

பொருள்

  1. (பெ) மூங்கில் கழி
  2. () மிகவும்
வினைச்சொற்கள்
  1. குறை
    "கூர்ப்பும் கழிவும் உள்ளத் திறக்கும்" - தொல்காப்பியம் 2-8-17
  2. கடத்து, செலவழி
  3. ஆசனவாயின் வழியே உடல் கழிவை வெளியேற்று
  4. இற, மடி, சாவு
    நெடுந்தகை கழிந்தமை அறியாது (கழி-->இற, புறநானூறு)

மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. (பெ) bamboo
  2. () very much, a lot
வினைச்சொற்கள்
  1. reduce
  2. subtract
  3. excrete faeces
  4. die

சொல்வளம் - கலி - களி - கழி

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 25
கங்காணி (பெ)

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 26
முள்நாறிப் பழம் முள்ளம் பழம் (பெ)
முள்நாறிப்பழங்கள்

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. துரியன் என்ற பழவகையினைக் குறிக்கிறது.
    விளக்கம்30வகையான பழங்கள் உள்ளன.ஒரு முள்நாறிப் பழம் 30 செமீ நீளமும் மற்றும் 15 செமீ சுற்றளவும் கொண்டிருக்கும். மேலும் ஒரு முள்நாறிப் பழம் 1 கிலோ முதல் 3 கிலோ வரை வளரக்கூடியவை. இப்பழத்தின் வாடை அதிகமாக இருக்கும்.இதுவும் இதன் சிறப்புத் தன்மையாகும்

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. durian

சொல்வளம்

பலா - சீதாப்பழம் - பலாப்பழம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 27
மல்லாக்க ()
மல்லாக்க இருக்கும் குழந்தை

பொருள்

  1. முதுகு நிலத்தில் படும்படியும், தலையும் நெஞ்சும் மேல் நோக்கி இருக்கபடியும் படுத்திருத்தல்

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. lying on the back

சொல்வளம்

ஒருக்களி - குப்புற
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 28
ஓடன் (பெ)
நில ஆமை/ஓடன்

பொருள்

  1. ஆமை
    இது நீரில் அல்லது நிலத்தில் வாழும் விலங்கினம் ஆகும்.

மொழிபெயர்ப்புகள்

  • ஆங்கிலம்
  1. tortoise, turtle
  • பிரான்சியம்
  1. tortue
  • இந்தி
  1. कछुआ,कुर्म
  • உருசீயம்
  1. черепаха

சொல்வளம்

யாமை - ஆமை - தவளை
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 29
சலாம் (பெ)
தினம் ஒரு சொல்/பரண்/2011/நவம்பர்:

பொருள்

  1. வந்தனம்
  2. வணங்கு(வி)
  3. வணக்கம்(பெ)
  • سلام‎ என்ற அரபிச் சொல்லுக்கு அமைதி என்று பொருள். அதிலிருந்து வந்த சொல்லே, சலாம் (ஸலாம்) ஆகும்.

மொழிபெயர்ப்பு

  1. ஆங்கிலம் - salaam
  2. இந்தி - सलाम, सन्धि
  3. அரேபியம் - سلام
  4. உருது - سلام

சொல்வளம்

நல்வரவு - பண்பாடு - அரபி
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - நவம்பர் 30
(பெ)

ஒலிப்பு

பொருள்

  1. சுழி,சுழியம்
  2. பின்னம்


சொல்வளம்

壹‎ - -
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக