எம்டன்
Appearance
பொருள்
எம்டன், .
- கண்டிப்பானவன்
- கில்லாடி, திறமையானவன்
- கொடியவன், வில்லன்
விளக்கம்
- "சரியான எம்டனப்பா அந்த ஆளு! எதுலையும் சிக்கமாட்டார்! எல்லாத்திலையும் தப்பிச்சுக்குவார்" என்று சில தந்திரசாலிகளைப் பார்த்துச் சொல்வதுண்டு. எம்டன் என்பது ஒரு ஜெர்மானியப் போர்க்கப்பல். மின்னல் வேகத்தில் வந்து குண்டுகளை வீசி, எதிரிகளைத் தாக்கிவிட்டு மறைந்துவிடும் ஆற்றல் கொண்டது. அதிலிருந்து வெளிப்படும் கண்கூசும் வெளிச்சத்தில், அது வந்த வேகத்திலேயே தன் வேலையை முடித்துவிட்டு, எதிலும் சிக்காமல் திரும்பிவிடும். அதனால்தான், யாரிடமும் மாட்டாமல் தந்திரமாக தப்பித்துக் கொள்ளும் ஆசாமிகளைப் பார்த்து, "எம்டன்' என்று சொல்வார்கள். (உபரி செய்தி- இந்த எம்டன் கப்பல்தான் 1914-இல் முதலாம் உலகப் போரின்போது, சென்னையில் குண்டுகளை வீசித் தாக்கி இங்கிலாந்து கப்பலையும், எண்ணெய் டேங்குகளையும் நாசப்படுத்தி மறைந்தது). (வழக்குச் சொற்கள்: அன்றும் இன்றும்!, தமிழ்மணி, 15 ஏப்ரல் 2012)
- முதல் உலகப் போரில் எம்டன் என்ற ஜெர்மானியப் போர்க்கப்பல் சென்னை மீது குண்டு வீசியது. இது மக்களிடையே பெரும் பீதியினை ஏற்படுத்தியது. எம்டன் என்ற சொல்லை கொடியவன், கண்டிப்பானவன் என்று பொருளுடனும், திறமையானவன் என்ற பொருளிலும் மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர்
பயன்பாடு
- திருநெல்வேலியில் ஒருவன் தன்னைத் "சண்டப்பிரசண்டன்' என்று சொல்லிக் கொண்டால் அவனை, "நீ என்ன பெரிய எம்டனோ' என்று கேட்பார்கள்.(நீ என்ன எம்டனோ?)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---எம்டன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற