உள்ளடக்கத்துக்குச் செல்

கண்ணேறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கண்ணேறு:
கண்ணேறு படிமம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கண்ணேறு, பெயர்ச்சொல்.
  • (கண்+ஏறு)
  1. கண்ணூறு
    (எ. கா.) கண்ணேறெலா மின்றறத்துடைப்பாம் (அரிசமய. பதுமை. 140).
  2. திருஷ்டிதோஷம்
    (எ. கா.) அந்திநின்று கண்ணூ றழித்தா ளணிநீ றளித்தே (தணிகைப்பு. களவு. 329).
  3. கண்திருஷ்டி


விளக்கம்

[தொகு]
  • தீய நோக்கோடும், பொறாமையினாலும் சிலர், சிறப்பாக இருக்கும் அல்லது செயல்படும் மற்றவர்களைப் பார்க்கும்போது அவர்களுக்குப் பாதிப்புகள் எற்படுமென்று நம்பப்படுகிறது... இதையே கண்படுதல், கண்திருஷ்டி என்றும் கூறுவர்

பயன்பாடு

[தொகு]
  • “மிகப்பெரிய குழந்தைதான் இல்லையா?” என்றாள். “அதை நாமே சொல்லிச்சொல்லி கண்ணேறு விழவேண்டுமா என்ன?” என்றாள் சத்யசேனை (வெண்முரசு, மழைப்பாடல் 81, ஜெயமோகன்)
  • குழந்தை கண்ணேறுப்பட்டு மிக இளைத்துவிட்டது. கண்ணேறு கழிக்க உப்பும், மிளகும் கொண்டுவா திருஷ்டி சுற்றிப்போடலாம்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. evil eye blight of the eyes causing sickness or misfortune
  • தெலுங்கு
  1. చెడు చూపు
  • இந்தி
  1. बुरी नज़र




( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்ணேறு&oldid=1282374" இலிருந்து மீள்விக்கப்பட்டது