சங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சங்கம், பெயர்ச்சொல்.
  1. சேர்க்கை. (சூடாமணி நிகண்டு)
  2. அன்பு
    (எ. கா.) சங்கந் தருமுத்தி (திருக்கோ. 85).
  3. புணர்ச்சி.
    (எ. கா.) சங்கமுண்கிகள் (திருப்பு. 556).
  4. ஒருநதி வேறொரு நதியுடனேனும் கடலோடேனும் கூடுமிடம் (யாழ். அக. )
  5. கூட்டம்
    (எ. கா.) சங்கமாகி வெங்கணை வீக்க மொடு (பெருங். மகத. 17, 38).
  6. சபை
    (எ. கா.) புலம்பரிச் சங்கம் பொருளொடு முழங்க (மணி. 7, 114).
  7. புலவர் (திவா.)
  8. பாண்டியர் ஆதரவுபெற்று விளங்கிய தலைச்சங்கம், இடைச் சங்கம், கடைச்சங்கம் என்ற முச்சங்கங்கள்
    (எ. கா.) எம்மைப் பவந்தீர்ப்பவர் சங்கமிருந்தது (பெரியபு. மூர்த்திநா.)
  9. சைனபௌத்தர்களின் சங்கம்
  10. சங்கு
    (எ. கா.) அடுதிரைச் சங்க மார்ப்ப (சீவக. 701).
  11. கைவளை
    (எ. கா.) சங்கங் கழல (இறை. 39, உரை, 260).
  12. நெற்றி (பிங். )
  13. குரல் வளை
  14. இலட்சங்கோடி
  15. கூட்டம்
    (எ. கா.) நெய்தலுங் குவளையு மாம்பலுஞ் சங்கமும் (பரிபா. 2, 13).
  16. சங்கபாஷாணம். (W.)
  17. கணைக்கால் (பிங். )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Union, junction, contact
  2. Friendship, love, attachment
  3. Sexual intercourse
  4. River-mouth; confluence of rivers
  5. Mustering, gathering
  6. Society, assembly, council, senate, academy
  7. Literati, poets
  8. Learned assemblies or academies of ancient times patronised by Pāṇḍya kings, three in number, viz., talai-c-caṅkam, iṭai-c-caṅkam, kaṭai-c-caṅkam
  9. Fraternity of monks among Buddhists and Jains
  10. Conch- shell, an instrument of sound
  11. Bracelet
  12. Forehead
  13. Adam's apple
  14. A kind of chemical
  15. Part of the leg from the ankle to the knee

சொல்பிறப்பு[தொகு]

சக்அ=சக=கூட
சக+அ=சகா=கூடியவன்
சக்இ=சகி=கூடியவள்
ச+க=சங்க (தோன்றல் விதி / இடைநிலை மயக்கம்)
சங்க+ம்=சங்கம்
சங்கம்+ம்=சங்கமம்

ஒன்றாகக் கூடியவர்கள் கூடுமிடம்.


சொல்வளம்[தொகு]

சங்கம்
சங்கத்தமிழ், சங்க இலக்கியம்
தொழிற்சங்கம், கூட்டுறவுச் சங்கம், தமிழ்ச் சங்கம், மாதர் சங்கம். விற்பனைச் சங்கம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சங்கம்&oldid=1903110" இலிருந்து மீள்விக்கப்பட்டது