சீவாளி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- சீவாளி, பெயர்ச்சொல்.
- நாதசுவரம் முதலிய ஊதுகருவிகளில் வாயில் வைத்து ஊதும் பகுதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- ஜீவ வளி என்பதுதான் சீவாளியாகியிருக்கிறது. ஜீவன் என்றால் உயிர். வளி என்றால் காற்று. உடலாகிய நாதஸ்வரத்திற்கு காற்றின் மூலம் சீவாளி உயிர் கொடுக்கிறது.[1]
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மூச்சுக் கட்டி ஊதவேண்டிய
- முக்கியமான கட்டத்தில் எல்லாம்
- சீவாளியைக் கழற்றிச் சரிபார்க்கிறது
- வயதான நாயனம் (கண்மணி குணசேகரன் கவிதை)
- நடராஜ சுந்தரத்தின் தாத்தா, பெரியவர் துரைக்கண்ணு பெரிய நாதஸ்வர வித்வான். அவர் வாசித்தால் - ஆலத்தூர் சகோதரர்கள்; சாத்தூர் சுப்ரமணியம் முதலானவர்கள் எல்லாம் மணிக்கணக்காக நின்று கேட்பார்கள்! நடராஜ சுந்தரம், சீவாளியைச் சூப்புவதை விட்டுவிட்டு, நாலாம் வகுப்பிலிருந்து முழு நேரப் படிப்பாளி ஆகிவிட்டான்! (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 29-டிசம்பர்-2010)
- நாகசுரம் சீவாளி கெண்டை, உலவு எனப்படும் நீண்ட பாகம், அணசு போன்ற பாகங்களைக் கொண்டதாகும். (ஒரு நாகசுரம் உருவாகிறது)
- நாகசுரத்திற்குரிய சீவாளி எனப்படும் சிறிய பொருளே இனிய இசையை நாயனத்தின் செவி குளிரத் தருகிறது. இந்தச் சீவாளி கொரத்தட்டை எனப்படும் ஒருவகைக் கோரையால் செய்யப்படுகிறது. இந்தச் சீவாளி அடைபடும்போது அதைச் சுத்தப்படுத்த உதவும் குச்சி யானைத் தந்தத்தால் செய்யப்படுகிறது. (பாரம்பரிய இசையின் தாக்கம், டாக்டர் பெருமாள்)
ஆதாரங்கள் ---சீவாளி---DDSA பதிப்பு + வின்சுலோ +
- ↑ குமுதம், 2.11.2015, பக்கம் 47, கிராமியச் சிறப்பிதழ்