சுனாமி
Appearance


ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
* (பெ) சுனாமி
- கடலுக்கு அடியில் ஏற்படு நிலநடுக்கம் போன்ற மிகப்பெரிய மாறுதல்களால், திடீரென கடல் நீர் மிகப்பெரிய அலைகளாக உருவெடுத்து கரையைச் சேர்ந்து அங்கே பேரழிவுகள் ஏற்படுத்தும். இவற்றை கடற்கோள்; ஆழிப்பேரலை என்றும் அழைப்பர்.
மொழிபெயர்ப்புகள்
*ஆங்கிலம்
விளக்கம்
- சுனாமி என்னும் சொல் சப்பானிய மொழியில் உள்ள 津波, (ட்ஃசுனாமி) என்னும் சொல்லில் இருந்து வருகின்றது. இதன் பொருள் "துறைமுக அலை" என்பதாகும். இதில் ட்ஃசு (tsu) என்பது துறைமுகம் என்றும், நாமி என்பது அலை என்றும் பொருள்படும். சுனாமி என்னும் சொல்லை உலகில் உள்ள பல மொழிகள் அப்படியே எடுத்தாண்டுள்ளனர். தமிழில் இதனை 2000 ஆண்டுகளாக கடற்கோள் என்று அழைத்து வந்துள்ளனர்.
பயன்பாடு
- பசிபிக் கடலில் சுனாமி (tsunami in Pacific ocean)
- இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்-இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை (earthquake in Indonesia causes tsunami warning in India)
- சுனாமி நிவாரணம் (tsunami relief)
(இலக்கியப் பயன்பாடு)
- நில மடந்தையின் சீற்றத்தால்தான் சுனாமியெனும் கொந்தளிப்பு சுமத்ராவில் தோன்றியது (கருணாநிதி)
{ஆதாரம்} --->

- சுனாமியால் தெருக்கு வந்த வள்ளங்கள்