உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாமி காரியம் சுய காரியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--स्वामी--कार्यम् + स्वयम् + कार्यम्--ஸ்வாமி + கா1ர்யம் + ஸ்வயம் + கா1ர்யம்---மூலச்சொற்கள்
  • சுவாமி + காரியம் + சுய + காரியம்

பொருள்

[தொகு]
  • சுவாமி காரியம் சுய காரியம், பெயர்ச்சொல்.
  1. தன்னலம் மட்டுமே பார்க்கும் பெண்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a woman who is so selfish, seeking welfare of her family only, wherever she goes, ignoring needs and requirements of others.

விளக்கம்

[தொகு]
  • பேச்சு வழக்கு...உரையாடல்களில் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர்..வெளியிடங்களுக்கு தன் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் செல்லும் ஒரு பெண், செல்லுமிடத்தில் மற்றவர்களின் வசதிகள், தேவைகள் சௌகரியங்கள் முதலானவற்றைப் பொருட்படுத்தாமல், சுயநலம் காரணமாக, தன் கணவன், தான் மற்றும் தன் பிள்ளைகளின் வசதி, தேவை ஆகியவைகளிலேயே குறியாகயிருந்து அவற்றை நிறைவேற்றிக்கொள்ள முயலும் தன்மையை சுவாமி காரியம் சுய காரியம் என அழைப்பர்...இந்தச் சொல்லின் சுவாமி என்பது கணவனையும், சுய என்பது 'தன்'என்பதையும் குறிக்கும் சொற்களாகும்...இந்தச்சொற்றொடரின் பயன்பாடு தற்சமயம் வழக்கொழிந்து வருகிறது...

பயன்பாடு

[தொகு]
  • 'இந்தக் கோடை விடுமுறைக்கு உங்கள் அக்கா கோதை தன் புருஷன், ஐந்துபசங்களுடன் நம் வீட்டிற்கு வருவதாகச் சொல்லுகிறாள்...அப்படி வந்தால் சுவாமி காரியம் சுய காரியம் என்று இருப்பாளே!...நமக்கிருக்கும் வசதிக்கு, எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்!?'...