பெண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
 1. பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்று நான்கு வகைப்படும் [].
  (எ. கா.) பெண்
  ணே பெரு மையுடைத்து (திருக்குறள் 907)
 2. மகள்.
  (எ. கா.) இந்திரன் பெண்ணே (கந்தபுராணம். திருப்ப. 35).
 3. சிறுமி
  (எ. கா.) சிறுமி தந்தையும் (சீவக சிந்தாமணி. 1458).
 4. மணமகள்.
  (எ. கா.) பெண்கோ ளொழுக்கம் கண்கொள நோக்கி (அகநானூறு. 112).
 5. விலங்கு தாவரங்களின் பெடை. (திவாகர நிகண்டு.)
  (எ. கா.) பெண்மரம்;பெண்சிங்கமே வேட்டைக்குப் போகும்.
 6. மனைவி.
  (எ. கா.) பெண்ணீற் றுற்றென (புறநானூறு. 82).
 7. வதூ
 8. மங்கை

ஒத்த பெயர்[தொகு]

மொழிபெயர்ப்புகள்

பெண்ணின் பருவங்கள்[தொகு]

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்

பழமொழிகளில் 'பெண்'[தொகு]

 • கடலாழம் கண்ட பெரியோர்க்கும் பெண்ணின் மனஆழம் காண்பதரிது.
 • பெண் என்றால் பேயும் இரங்கும்.
 • பெண்ணிற்கு இடம் கொடுக்காதே.


( மொழிகள் )

சான்றுகள் ---பெண்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


சொல் வளப்பகுதி

 :(பேண்) - (பெடை) - (பெள்) - (அங்கனை) - (அதரம்) - (அந்திகை) - (அந்தலார்) - (அமரமாதர்) - (அம்மை) - (அரிவை) - (அச்சி) - (அபலை) - (அருணி) - (அருவாட்டி) - (அளகு) - (ஆட்டி) -(ஆடவள்) - (ஆயிழை) - (ஆள்) - (ஆன்) - (இடைச்சி) -(தையல்) - (மாது), (மணப்பெண்) -

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெண்&oldid=1983324" இருந்து மீள்விக்கப்பட்டது