செந்தமிழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

செந்தமிழ் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • செம்மைப் பண்புடைய உயர்வழக்குத் தமிழ்
  • கலப்பற்ற தூய தமிழ்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • Tamil of high standard
  • Tamil of refined quality (standard)
விளக்கம்

எந்த மொழியும் 'எல்லா இடத்திலும், எல்லோராலும் ஒரே மாதிரியாகப்' பேசப்படுவதில்லை. (ஒரே மொழியாக இருந்தாலும், அதற்கு ஒவ்வொரு பகுதியிலும் ஒரு 'வட்டார வழக்கு'(dialect) இருக்கிறது.) அதனால் ஒரே மொழிக்குள் வெவ்வேறு இடங்களில் பல வேறுபாடுகள் எழுகின்றன. இந்த வேறுபாடுகளுடன் பேசப்படும் மொழி 'பேச்சு' மொழி எனப்படுகிறது; இதில் 'உயர்வழக்கு' என்ற ஒன்றே இருக்காது. ஆனால் எழுத்து மொழியில் 'உயர்வழக்கு' இல்லாவிடினும் ஒரு 'தரம்' இருக்கும். இந்தத் தரத்தை அதிகமாகப் பெற்ற 'தமிழே' செந்தமிழ் எனப்படும்.

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
பயன்பாடு
  • செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே (பாரதியார்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

செந்தமிழ் - செம்மை - தமிழ்
பைந்தமிழ், செம்மொழி


ஆதாரங்கள் ---செந்தமிழ்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=செந்தமிழ்&oldid=1640915" இலிருந்து மீள்விக்கப்பட்டது