உள்ளடக்கத்துக்குச் செல்

செய்நேர்த்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

செய்நேர்த்தி , (பெ)

  1. (செயலைச் செய்வதில்) சிறப்பு/ஒழுங்கு; செயல்நுணுக்கம்; வேலைப்பாட்டுச் சிறப்பு
  2. குற்றங் குறைபாடில்லாத நிலச்சாகுபடி
  3. சாகுபடிக்குமுன் நிலத்திற் செய்யும் சீர்திருத்தம்
  4. சரியான போசணை. செய்நேர்த்தியில்லாத பிள்ளை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. perfection or excellence in execution of a job
  2. proper cultivation of land, as by manuring, weeding in season, etc.
  3. improvement effected on land before actual cultivation; reclamation of waste land (Colloq)
  4. proper nourishment
விளக்கம்
பயன்பாடு
  • கோயிந்துவின் வேலை (செய்நேர்த்தி) பிரமாதமா இருக்கும்; அது பனை ஓலை ஆனாலும் சரி கம்மந்தட்டை மேய்ச்சலானாலும் சரி அப்படி ஒரு சுத்தம். ஓலைக் கூரை என்றால் மூணு வருசத்துக்குக் கவலை இல்லை. கம்மந்தட்டை என்றால் அஞ்சி வருசம் உத்தரவாதம். (கி.ரா. பக்கங்கள், கி.ராஜநாராயணன், கீற்று)
  • வெங்கட் சாமிநாதன் கூற வரும் கருத்து தமிழின் இலக்கியமரபு என்பது செய்யுள் மரபே ஒழிய கவிதை மரபு அல்ல; (கவித்துவத்தைவிட) செய்நேர்த்தியே இங்கு கலையாக முன் வைக்கப்பட்டது. ஆகவே திரும்பத் திரும்ப ஒன்றையே செய்தல் என்பதுதான் கலையாகக் கருதப்பட்டது என்பது.
  • இந்தியக்கலை என்பது செய்நேர்த்தி மட்டுமே என்றும் அதில் தனிமனித அந்தரங்க வெளிப்பாட்டுக்கு இடமில்லை என்று பதினெட்டாம் நூற்றாண்டிலேயே ஆங்கில, ஜெர்மானிய இந்தியவியலாளர் குறைகூற ஆரம்பித்துவிட்டிருந்தார்கள். ஆனால், இந்தியச் செவ்வியலில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே செவ்வியலில் திருப்பத்திரும்பச் செய்வது ஒரு மரபாகவே இருந்து வருவதைப் பார்க்கலாம். செவ்வியல்கலை என்பது நுட்பத்தை மேலும் மேலும் தேடிச் செல்லக் கூடிய ஒன்றாகும். ஒரே வெளிப்பாட்டை மீண்டும் மீண்டும் நுட்பமான மனோ தர்மத்தின்படி விரிவாக்கியபடியே செல்கிறது அது. (வெ.சா-ஒருகாலகட்டத்தின் எதிர்க்குரல் 2, ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---செய்நேர்த்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :நேர்த்தி - சீர்திருத்தம் - வேலைப்பாடு - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=செய்நேர்த்தி&oldid=1059996" இலிருந்து மீள்விக்கப்பட்டது