சேதி
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- சேதி, பெயர்ச்சொல்.
- செய்தியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- இந்தச் சேதி யுரைக்க... (இராமநாடகம்-பாலகாண்டம், 13)
- தன்மையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- வாவறூங்குகின்ற சேதியென்ன... (உத்தர காண்டம்; ராமாயணம்-சம்புவன் வதைப்படலம், 32)
- வடநாடுகளுள் ஒன்றைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- சேதிப்பெருமான் சிசு பாலன்... (மகாபாரதம்-திரௌபதி மாலை இட்ட சருக்கம், 42)
- சேதிநாட்டைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- சேதி நன்னாட்டு நீடு திருக்கோவலூரில்... (பெரியபுராணம்-மெய்ப்பொருள் நாயனார் புராணம், 1)
- சேதியை ஆண்ட ஓர் அரசபரம்பரையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- சேதிமா மரபோன்... (மகாபாரதம்-குருகுலச் சருக்கம், 104)
- சேதி, வினைச்சொல்.
- வெட்டுதலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- தாதை தனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப... (திருவாசகம்-15, 7)
- அழித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- மேலுலகுஞ் சேதித்தீர்... (உபதேசகாண்டம்-சூராதி., 50)
- உறுப்புச் சேதித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- அவர்களைச் சேதித்தனர்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
|
இலக்கிய மேற்கோள்கள்
[தொகு]- நளவெண்பா: சேதித் திருநாடு சென்று
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +