ஜரிகை
Appearance
பொருள்
ஜரிகை, .
- தங்கம், வெள்ளி ஆகியவற்றை பயன்படுத்தி தயாரித்த நூல் இழை
- பட்டு புடவைகளின் பார்டர், முந்தி போன்றவைகளில் ஜரிகை அலங்காரங்கள் வடிவமைக்கப்படுகின்றன
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Gold and silver lace
விளக்கம்
- தங்கம், வெள்ளி ஆகியவற்றை பயன்படுத்தி சூரத்தில் ஜரிகை தயாரிக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் முகூர்த்த பட்டுச் சேலைகளில், குறைந்தது 400 கிராம் ஜரிகை பயன்படுத்துகின்றனர்.
பயன்பாடு
- அவன் பங்கஜத்துக்காக - வரப்போகும் மனைவிக்காக - ஜரிகை புட்டா சேலை - அவன் கைப்பட நெய்தது; முதலாளியிடம் அடக்க விலைக்கு வாங்கி வைத்திருந்தான். பெரிய தாலியும் சிறிய தாலியும் தட்டி வைத்தான். ஒரு சங்கிலியும் தயார் செய்தான் (பைத்தியக்காரப் பிள்ளை, எம்.வி. வெங்கட்ராம்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஜரிகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி