தலையாரி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தலையாரி(பெ)
- கிராமக் காவற்காரன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- முதல்நாளே தலையாரி சங்கரத்தேவர் அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். அவருடன் அப்பா ஜமீன்தாரை பார்க்கச் சென்றார். ஜமீன் பங்களா ஒரு பெரிய தோட்டத்தில் ஓடைக்கரையில் தென்னை மரகூட்டங்களுக்குள் இருந்தது. முகப்பிலேயே வெளிவாசல் அருகே ஜமீன் அலுவலகம். அங்கேதான் கணக்குப்பிள்ளைகளும் பிறரும் இருப்பார்கள். ஜமீன்தார் காலையில் ஒருமுறை வந்து எல்லாவற்றிலும் கையெழுத்து போட்டுவிட்டுச் செல்வார். (வணங்கான், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தலையாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +