திருக்குறள் சொல்லிலக்கண அகரமுதலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

திருக்குறள் சொல்லிலக்கண அகரமுதலி[தொகு]

திருக்குறட் சொற்கள்[தொகு]

(திருக்குறளில் வரும் சொற்களின் இலக்கணம் பற்றி உரைப்பது. மரபுவழி இலக்கணமான நன்னூலை அடிப்படையாகக் கொண்டது; அதிகார வரிசையில் அமைந்தது. இது, பெரும்பாலும், தமிழ்மணி சாமி.வேலாயுதம் பிள்ளை அவர்களின்திருக்குறட் சொல்லடைவு என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டது.)


பார்க்க:

திருக்குறள்
திருவள்ளுவமாலை
திருக்குறள் அகரமுதலி
திருக்குறள் முதற்குறிப்பு அகரமுதலி
திருக்குறள் கடைச்சொல் அகரமுதலி

அதிகாரம்: 01 கடவுள் வாழ்த்து[தொகு]

குறள்:01[தொகு]

அகர முதல வெழுத்தெல்லா மாதி அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
பகவன் முதற்றே வுலகு. (௧) பகவன் முதற்றே உலகு. (01)

சொல்லிலக்கணம்:

‘அகரம்’ — அ+கரம், அ- பகுதி, கரம்- சாரியை. சாரியை பெற்ற உயிர்முதலெழுத்து;
‘முதல’ - முதல்+அ, முதல்- பகுதி, அ- விகுதி. அஃறிணை பலவின்பால் குறிப்பு வினைமுற்று.
‘எழுத்து’ - எழுது+உ, எழுது- பகுதி, உ- விகுதி. எழுது>எழுத்து, திரிபு(இரட்டித்தல்); செயப்பாட்டு வினை ஆட்சி, பொருட்பெயர். எழுதப்படுவது எழுத்து, காரணப்பெயர்.
‘எல்லாம்’ - எல்+ல்+ஆம், எல்- பகுதி, ல்- சந்தி, ஆம்- விகுதி; அஃறிணை பலவின்பால் பொதுப் பெயர்.
‘ஆதி’ - வடமொழி, (ஆதி:) தமிழ்மொழிக்கேற்பத் திரிக்கப்பட்டது என்பர். காலப்பெயர்.
‘பகவன்’ - வடமொழி பகவான் என்பது, பகவன் என வந்தது என்பர். உயர்திணை ஆண்பால் படர்க்கைப் பெயர், பொருட் பெயர். (பகலவன் என்று கதிரவனைக் குறித்தால் அது தமிழ்ச் சொல்ஆகும்).
‘முதற்றே’ - (முதற்று+ஏ) முதல்+று = முதற்று, முதல்>முதற் எனத்திரிந்தது. முதல்- பகுதி, று- விகுதி. அஃறிணை ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று. ஏ- ஈற்றசை, தேற்றப் பொருளில் வந்தது, (தேற்றம்=தெளிவு).
‘உலகு’ - இடப்பெயர்.

குறள்: 02[தொகு]

கற்றத னாலாய பயனென்கொல் வாலறிவ கற்றதனால் ஆய பயன் என் கொல் வால் அறிவன்
னற்றா டொழாஅ ரெனின். (௨) நல் தாள் தொழாஅர் எனின். (02)

சொல்லிலக்கணம்

கற்றதனால் - கல்+ற்+அ+து+அன்+ஆல், கல்- பகுதி, கல்>கற்-லகர றகரத் திரிபு, ற்-இடைநிலை, அ- சாரியை, து- விகுதி, அன்- சாரியை, ஆல்- 3-ஆம் வேற்றுமை உருபு. அஃறிணை ஒன்றன்பால் இறந்த காலத் தொழிற் பெயர்.
ஆய - ஆ+ய்+அ; ஆ- பகுதி, ய்- இடைநிலை, அ- விகுதி. ‘செய்த’ எனும் இறந்தகாலப் பெயரெச்சம்.
பயன் - பயம்> பயன் திரிபு. பயம்- பகுதி. பயம்>பயன்- போலி; உரிச்சொல், பண்புப் பெயர்.
என் - எவன். எவன்- பகுதி, எவன்> என் திரிபு. வினா, அஃறிணை ஒன்றன்பால் படர்க்கைக் குறிப்பு வினையாலணையும் பெயர்.
கொல் - அசைநிலை. இடைச்சொல்.
வால் - வான்மை. வான்மை- பகுதி, வான்மை> வால் திரிபு. பண்புப் பெயர், ப.தொகை.
அறிவன் - அறி+வ்+அன். அறி- பகுதி, வ்- இடைநிலை, அன்- விகுதி. உயர்திணை ஆண்பாற் படர்க்கைப் பெயர். பண்புப் பெயர். வருபெயர் (பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் அடிப்படையில் வரும் பெயர்).
நல் - நன்மை- பகுதி, நன்மை> நல் திரிபு. பண்புப் பெயர். பண்புத்தொகை.
தாள் - சினைப்பெயர்.
தொழாஅர் - தொழு+ஆர்/ஆஅர். தொழு- பகுதி, ஆர்- விகுதி, ஆர்>ஆஅர் என நீண்டது, அளபெடை. எதிர்மறை உயர்திணை பலர்பால் படர்க்கை தெரிநிலை வினைமுற்று. (பொருள்: தொழமாட்டார்).
எனின்- என்+இன். என்- பகுதி, இன்- விகுதி. செயின் எனும் வினையெச்சம். (பொருள்: என்றால்).

குறள்: 03[தொகு]

மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (௩)நிலம் மிசை நீடு வாழ்வார். (03)

சொல்லிலக்கணம்:

மலர்மிசை: மலர்+மிசை. மலர்- பகுதி, மிசை- வேற்றுமை உருபு. சினைப்பெயர், 7-ஆம் வேற்றுமை. (பொருள்: மலரின்கண்/மலரின்இடத்து).
ஏகினான்: ஏகு+இன்+ஆன். ஏகு- பகுதி, இன்- இடைநிலை, ஆன்- விகுதி. உயர்திணை ஆண்பால் படர்க்கை இறந்தகால வினையாலணையும் பெயர். (பொருள்: நடந்தவன்).
மாண்: மாண்- பண்புப் பெயர், பண்புத்தொகை. (பொருள்: மாட்சிமைப்பட்ட).
அடி: அடி - சினைப்பெயர். (பொருள்: தாள்/திருவடி)
சேர்ந்தார்: சேர்+த்>ந்+த்+ஆர். சேர்- பகுதி, த்- சந்தி (த்>ந் ஆகத் திரிந்தது), ந்- விகாரம், த் - இடைநிலை, ஆர்- விகுதி. உயர்திணை பலர்பால் படர்க்கை இறந்தகால வினையாலணையும் பெயர். (பொருள்: இடைவிடாது நினைந்தவர்) [சேர்+த்+ஆர்> சேர்+த்+த்+ஆர்> சேர்+த்>ந்+த்+ஆர்>சேர்+(த்)/ந்+த்+ஆர்=சேர்ந்தார்]
நிலமிசை: நிலம்+மிசை. நிலம்- பகுதி, மிசை- வேற்றுமை உருபு. இடப்பெயர். ஏழாம் வேற்றுமை உருபு. (பொருள்: நிலம் மிசை- வீட்டுலகின் கண்).
நீடு: நீடு- இடைச்சொல். (பொருள்: நெடிது, அழிவின்றி).
வாழ்வார்: வாழ்+வ்+ஆர். வாழ்- பகுதி, வ்-இடைநிலை, ஆர்- விகுதி. உயர்திணை பலர்பால் படர்க்கை எதிர்கால வினைமுற்று. (பொருள்: நிலைபெற்றிருப்பார்).

குறள்: 04[தொகு]

வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க் வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
கியாண்டு மிடும்பை யில. (௪)யாண்டும் இடும்பை இல. (04)

சொல்லிலக்கணம்:

வேண்டுதல்- வேண்டு+தல். வேண்டு- பகுதி, தல்- விகுதி. தொழிற்பெயர். (பொருள்: விழைதல், விரும்புதல்).
வேண்டாமை- வேண்டு+ஆ+மை. வேண்டு- பகுதி, ஆ- எதிர்மறை இடைநிலை, மை- விகுதி. எதிர்மறை தொழிற்பெயர். (பொருள்: விரும்பாதிருத்தல், வெறுத்தல்).
இலான்- இன்மை+ஆன். இன்மை- பகுதி (இல் எனத் திரிபு), ஆன்- விகுதி.(இலான்-எதிர்மறை ஆண்பால் குறிப்பு வினையாலணையும் பெயர்) ஆறாம் வேற்றுமைத் தொகை. (பொருள்: இல்லாதவனது).
அடி- சினைப்பெயர். (பொருள்: தாள், திருவடி)
சேர்ந்தார்க்கு- சேர்+த்+ந்+த்+ஆர்+க்+கு. சேர்= பகுதி, த்= சந்தி, ந்- விகாரம், த்- இடைநிலை, ஆர்- விகுதி. க்- சந்தி, கு- வேற்றுமை உருபு. உயர்திணை பலர்பால் படர்க்கை வினையாலணையும் பெயர், 4-ஆம் வேற்றுமை. சேர்ந்தார்க்கு+யாண்டும்=சேர்ந்தார்க்கியாண்டும், புணர்ச்சியில் குறறியலுகரம், குற்றியலிகரமாதல், [க்கு>க்கி] (பொருள்: இடைவிடாது நினைந்தவர்க்கு).
யாண்டும்- யாண்டு+உம். யாண்டு, உம் - இடைச்சொற்கள். (பொருள்: எக்காலத்திலும்).
இடும்பை- இடும்பு+ஐ. இடும்பு- பகுதி, ஐ- சாரியை. பண்புப் பெயர். (பொருள்: (பிறவித்)துன்பம்).
இல- இன்மை+அ. இன்மை>இல எனத் திரிந்தது. இன்மை- பகுதி, அ- விகுதி. எதிர்மறை அஃறிணைப் பலவின்பால் குறிப்பு வினைமுற்று. (பொருள்: உளவாகா).

குறள்: 05[தொகு]

இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன் இருள் சேர் இரு வினை உம் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (௫) பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு. (05)

சொல்லிலக்கணம்:

இருள்- அஃறிணை ஒன்றன்பால் பொருட் பெயர்- பண்புப் பெயர். (பொருள்: மயக்கம்)
இரு- இரண்டு> இரு. பொருட்பெயர், பண்புத்தொகை (இருவினை), (பொருள்: இரண்டாகிய)
வினை- தொழிற் பெயர். (பொருள்: செயல்/கர்மா).
உம்- முற்றும்மை. இடைச்சொல். (இருவினையும்- முற்றுப்பொருள்தரல்.)
சேரா- சேர்+ஆ. சேர்- பகுதி, ஆ- விகுதி. எதிர்மறை அஃறிணை பலவின்பால் படர்க்கை வினைமுற்று. (பொருள்: பொருந்தமாட்டா).
இறைவன்- இறை+வ்+அன். இறை- பகுதி, வ்-இடைநிலை, அன்- விகுதி. [இறை- இறு+ஐ. இறு- பகுதி, ஐ- விகுதி].உயர்திணை ஆண்பால் படர்க்கைப் பெயர். தொழிற் பண்புப் பெயர் (இறு- தங்குதல், எல்லாவிடங்களிலும் தங்குதலையுடையவர், கடவுள்).
பொருள்- பண்புப் பெயர். (பொருள்: உண்மை, மெய்ப்பொருள்).
சேர்- உரிச்சொல். (சேர்புகழ்- வினைத்தொகை, சேர்ந்த புகழ், சேரும் புகழ், சேர்கின்ற புகழ்).
புகழ்- பண்புப் பெயர். (பொருள்: இசை, கீர்த்தி).
புரிந்தார்மாட்டு- புரி+த்>ந்+த்+ஆர்+மாட்டு. புரி- பகுதி, த்- சந்தி, த்>ந் திரிதல் விகாரம், த்- இடைநிலை, ஆர்- விகுதி, மாட்டு- வேற்றுமை உருபு-7ஆம் வேற்றுமை. உயர்திணை பலர்பால் படர்க்கை இறந்தகால வினையாலணையும் பெயர். ஏழாம் வேற்றுமை. (பொருள்: விரும்பினாரிடத்தில்).

குறள்: 06[தொகு]

பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். (௬) நெறி நின்றார் நீடு வாழ்வார். (06)

சொல்லிலக்கணம்:

குறள்: 07[தொகு]

சொல்லிலக்கணம்:

குறள்: 08[தொகு]

சொல்லிலக்கணம்:

குறள்: 09[தொகு]

சொல்லிலக்கணம்:

குறள்: 10[தொகு]

சொல்லிலக்கணம்:பார்க்க:[தொகு]

திருக்குறள் அகரமுதலி

நா