என்றும் மாறாத நட்பு மற்றும் உறவைக்காட்டும் சொற்றொடராக சமூகத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் கூட்டுச்சொல் நகமும் சதையும் போல...உடம்பில் சதை/தோலோடு இணைந்தும், தனியாகவும் அமைந்திருக்கும் உடற்பாகங்கள் மயிர், பற்கள் மற்றும் நகங்கள் ஆகும்...வயதானக் காரணத்தினால் அல்லது நோய்களால் மயிர் கொட்டி, தலை வழுக்கையாகிவிடும்...பற்கள் விழுந்து அல்லது பிடுங்கப்பட்டு வாய் பொக்கையாகிவிடும்...ஆனால் நகங்கள் மட்டும் எந்த நிலையிலும் மனிதன் செத்துப் புதைக்கப்படும்/எரிக்கப்படும்வரை விரல்களோடு இணைந்து இருக்கும்...நகங்கள் முழுவதும் இழந்து மொட்டையான கைவிரல்கள் அல்லது கால்விரல்களையுடைய மனிதர்களைக் காண்பதரிது...ஆதலினால்தான் நகமும், சதையும் இணைபிரியா நட்பு அல்லது உறவுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுகிறது...