நீத்தண்ணீர்
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
நீத்தண்ணீர், பெயர்ச்சொல்.
- நீராகாரம்; பழஞ்சோற்றில் கலந்த நீர் (நீத்தண்ணி என்பது பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- rice-water, usually kept overnight
விளக்கம்
- மீதமானச் சோற்றில், அச்சோறு கெடாமல் இருக்க, அச்சோறு முழுகும் அளவுக்கு நீரை ஊற்றுவர். அந்நீரால், அச்சோறு அடுத்த நாள் கெடாமல் இருக்கும். அடுத்த நாள் அச்சோற்றுக்கு மேலே இருக்கும் நீரை (சில நேரங்களில் அச்சோற்றை அந்நீரில் கரைத்தும்) உண்பர். இதுவே நீராகாரம். சத்துள்ள திரவநிலை உணவாக இது கருதப்படுகிறது.
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- என் புள்ளெகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக்கிடும் - (பால்வண்ணம்பிள்ளை, புதுமைப்பித்தன்)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---நீத்தண்ணீர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற